தல தோனிக்கு வாழ்த்து சொன்னது ஒரு குற்றமா..? டிவிட்டரில் மோதிக்கொள்ளும் அஜித், சிம்பு, தனுஷ் ரசிகர்கள்...!

By manimegalai aFirst Published Oct 16, 2021, 9:40 PM IST
Highlights

சென்னை அணியில் ஆடுவதலாயே தோனிக்கு தல பட்டம் கொடுக்கப்பட்டது. ஆனால், இதற்கான மோதல் இன்றுவரை நீடித்து வருகிறது.

சென்னை அணியில் ஆடுவதலாயே தோனிக்கு தல பட்டம் கொடுக்கப்பட்டது. ஆனால், இதற்கான மோதல் இன்றுவரை நீடித்து வருகிறது.

தமிழ்நாட்டில் தல என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது நடிகர் அஜித் தான். ஆனால் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடங்கி, அதிலும் சென்னை அணிக்காக அப்போதைய இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தலைமை தாங்கி, வெற்றிக் கோப்பையையும் வாங்கிக் கொடுத்ததால் ரசிகர்கள் அவரை தல தோனி என அன்பாக அழைக்கத் தொடங்கினர். அதன் பின்னர் இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் தல என்றாலே தோனி தான் என்று நினைக்க தொடங்கினார்கள். தொடக்கத்தில் இருந்தே அஜித் ரசிகர்களை இச்சம்பவம் காண்டாக்கியது.



இந்தநிலையில் தான் கடந்தாண்டு ப்ளே ஆஃப் கூட செல்லாத சி.எஸ்.கே., நடப்பாண்டில் 4வது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்றது. அதிலும் டெல்லிக்கு எதிரான எலிமினேட்டர் ஆட்டத்தில் சென்னை அணியின் கேப்டன் தோனி பழைய பார்முக்கு திரும்பி, தோல்வியின் விளிம்பில் இருந்த சி.எஸ்.கே.வை, வெற்றிக்கு அழைத்துச் சென்றதை அனைவரும் பாரட்டினர். அப்போது மீண்டும் தல தோனி பஞ்சாயத்து ஆரம்பமானது.



இறுதிப்போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் முதல் அனைத்து தரப்பினரும் பாராட்டு மழை பொழிந்தனர். அப்போது தான் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தல தோனி என்று குறிப்பிட்டு வாழ்த்து கூறியிருந்தார்.



அப்போது, ஆத்திரத்தில் தனுஷை, அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வசைபாடினர். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக தன்னை தல ரசிகன் என அடையாளப்படுத்திக்கொண்டும், ரசிகர்களால் சின்ன தல என்று அழைக்கப்படும் நடிகர் சிம்புவும் தல தோனி என குறிப்பிட்டு பாராட்டினார். இது அஜித் ரசிகர்களை மேலும் கொதிப்படையச் செய்தது.



பொங்கியெழுந்த அஜித் ரசிகர்கள் தனுஷ் மற்றும் சிம்புவை வசைபாடி நன்றிகெட்ட எலும்பன் தனுஷ், நன்றிகெட்ட நாய் சிம்பு என டிவிட்டரில் டிரெண்ட் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த தனுஷ் உள்ளிட்ட பிற நடிகர்களின் ரசிகர்கள் ஆமை அஜித் என பதிலடி டிரெண்டிங்கை உருவாக்கியுள்ளனர்.

அஜித், விஜய், தனுஷ், சிம்பு என நடிகர்கள் தங்களின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நாகரீகமாக நடந்துகொள்ள வேண்டும் என பலமுறை அறிவுறுத்தியும், ரசிகர்களின் இச்செயல் திரையுலகை சார்ந்தவர்கள் மட்டுமல்லாது பலரையும் முகம் சுளிக்கச் செய்துள்ளது.

click me!