பாலியல் தொந்தரவு! பிக்பாஸ் ரித்விகாவின் பரபரப்பு புகார்!

Published : Oct 19, 2018, 04:10 PM IST
பாலியல் தொந்தரவு! பிக்பாஸ் ரித்விகாவின் பரபரப்பு புகார்!

சுருக்கம்

சிறுவயதில் நானும் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என பிக்பாஸ் பிரபலம் ஒருவர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் மீ டூ விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

சிறுவயதில் நானும் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என பிக்பாஸ் பிரபலம் ஒருவர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் மீ டூ விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதையடுத்து, சினிமா, பத்திரிக்கை, அரசியல் என அனைத்து துறையிலும் பணியாற்றும் பெண்களும், தாங்கள் சந்தித்த மோசமான பாலியல் சீண்டல் அனுபவங்களை மீ டூ ஹேஷ்டேக் மூலம் பகிர்ந்து வருகின்றனர். 

உதாரணமாக, பிரபல பாலிவுட் நடிகர் நானே படேகர் மீது தனுஸ்ரீ தத்தா பாலியல் புகாரை முன்வைத்த நிலையில், அவரைத் தொடர்ந்து, தமிழ்த்திரையுலகில், கவிஞர் வைரமுத்து மீது திரைப்பட பாடகி சின்மயி குற்றஞ்சாட்டினார். இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட நிலையில், சர்ச்சை எழுத்தாளர் லீனா மணிமேகலையும், இயக்குநர் சுசி கணேசன் மீது பாலியல் பலாத்கார முயற்சி குற்றச்சாட்டை முன்வைத்தார். இதைத் தொடர்ந்து, அமலா பால், வரலட்சுமி சரத்குமார், அதிதி ராவ் ஆகியோரும் பாலியல் சீண்டல் அனுபவங்களை கூறியுள்ளனர். 

அந்த வகையில் சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்த பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராகி, பிரபலமடைந்த ரித்விகாவும் தான் சந்தித்த பாலியல் சீண்டல் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அண்மையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரித்விகா, ”எனக்கும் சிறு வயதில் பாலியல் தொல்லை நேர்ந்துள்ளது. நான் பள்ளிப்படிப்பை படித்துக்கொண்டிருக்கும் வயதில் என்னுடைய வீட்டின் அருகில் இருந்த ஒருவர் என்னிடம் தப்பாக நடந்து கொண்டார். 

அப்போது எனக்கு சிறு வயது என்பதால் அதை பற்றி எனக்கு சரியாக தெரியவில்லை. ஆனால், நான் ஓரளவிற்கு முதிர்ச்சி அடைந்த பின்னர் தான் அவர் செய்தது தவறு என்று எனக்கு தெரிந்தது. தற்போது பாலியல் தொல்லை குறித்து பெண்கள் வெளிப்படையாக பேசி வருவது நல்ல விஷயம் தான்” என்று கூறியுள்ளார். மேலும், “நடிகை வரலக்ஷ்மி போன்றவர்கள் #metoo விஷயத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

முதலில் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், தீய தொடுதல் (good touch, bad touch) என்பதை சொல்லி தரவேண்டும். குழந்தையிலிருந்தே அதை அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தால்தான், அவர்களுக்கு இது போன்ற தொல்லைகள் இருக்காது என்றும் ரித்விகா கருத்து தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி