
நடிகர்கள் எந்த வம்புதும்புக்கும் போகாமல் அஜீத் போல் இருக்கவேண்டும்’ என்று தமிழிசை மற்ற தமிழ் நடிகர்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார். இது விஜய் ரசிகர்கள் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து தனது படங்களிலும், அப்படங்கள் தொடர்பான விழாக்களிலும் விஜய் அரசியல் பேசிவருவதால், பி.ஜே.பி. வட்டாரம் அவர் மேல் செம காண்டில் உள்ளது. விஜயின்’மெர்சல்’ படத்துக்கு ஹெச்.ராஜாவும், மேடம் தமிழிசையும் இலவச விளம்பரம் கொடுத்தது ஊரறிந்த சமாச்சாரம்.
இந்நிலையில் விஜயின் ‘சர்கார்’ படத்துக்கு தேவையில்லாமல் விளம்பரம் கொடுத்து அப்படத்துக்கு சப்போர்ட் பண்ணமாட்டோம்’ என்று அமைதி காத்துவந்த தமிழிசை நடிகர்கள் என்றால் அஜீத் போல் ஒழுக்கமாக இருக்கவேண்டும்’ என்று பேசி விஜய் ரசிகர்களுக்கு வெறுப்பேற்றியிருக்கிறார்.
இன்னொரு பக்கம் அஜீத் ரசிகர்களும் ‘யக்கோவ் அவரு பொழப்பு ஏதோ நல்லபடியா போய்க்கிட்டிருக்கு. என்னத்தையாவது பேசி அதைக்காலி பண்ணீராதீங்க’ என்று அன்பு வேண்டுகோள் விடுக்கிறார்கள் தல’ ரசிகர்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.