எப்படி அதை சொல்லலாம்! மீடூ சர்ச்சையில் கருத்து சொல்லி சிக்கிய பிரபல நடிகை! வலுக்கும் எதிர்ப்பு!

By manimegalai aFirst Published Jan 3, 2019, 12:24 PM IST
Highlights

இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ராணி முகர்ஜி.  தமிழில் கமலஹாசன் இயக்கி, தயாரித்து நடித்த  'ஹேராம்' படத்தில் கதாநாயகியாக நடித்தார். தற்போது இவர் மீடூ குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகாருக்கு பிறகு,  இந்திப்பட உலகில் மீடூ,  இயக்கம் விவாதமாக மாறியிருக்கிறது. டெலிவிஷன்களிலும் மீடூ  கலந்துரையாடல்கள் நடத்துகிறார்கள்.

இந்நிலையில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் நடிகை தீபிகா படுகோன், அனுஷ்கா சர்மா, ஆலியாபட், ஆகியோர் மீடூவிற்கு  ஆதரவாக கருத்து சொல்லி பாலியல் தொல்லை கொடுப்பவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றனர்.

ஆனால் ராணிமுகர்ஜி அந்த கருத்தை எதிர்த்தார். அவர் பேசும்போது ஆண்கள் மாறமாட்டார்கள் பெண்கள்தான் மாற வேண்டும் பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். இதற்காக அவர்கள் தற்காப்பு கலைகள் கற்றுக்கொள்வது அவசியம் என்றார்.

ராணி முகர்ஜியின் கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன பலர், இதனை கண்டித்துப் பேசி வருகின்றனர்.  பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு தற்காப்பு கலை தெரிந்திருந்தால், என்ன செய்வது ?என்று சமூகவலைதளத்தில் பலர் இவரை விமர்சிக்க தொடங்கியுள்ளனர். 

click me!