
சிவா இயக்கத்தில் 4 ஆவது முறையாக இணைந்து தல அஜித் இப்படத்தில் நடித்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். யோகி பாபு, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இமான் இப்படத்திற்கு இசையமைள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
ஜனவரி 10ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பேட்ட' திரைப்படமும், தல அஜித்தின் 'விஸ்வாசம்' திரைப்படமும் வெளியாகவுள்ள நிலையில் விஸ்வாசம் பட பேச்சு ரசிகர்களிடம் அதிகம் உள்ளது. படத்திற்கான எதிர்ப்பார்ப்பு உச்சத்தில் உள்ளது, அதற்கு ஏற்றார் போல் விஸ்வாசம் பட புக்கிங் எதிர்ப்பார்த்ததை விட அதிகமாக இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.
சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் ஒருபக்கம் படத்தை புரொமோட் செய்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான வீடியோக்களில் படு வைரலானது அஜித்தின் விஸ்வாசம் பட டிரைலர். ரஜினியின் பேட்ட, விஜய்யின் சர்கார் வீடியோக்களின் சாதனைகளை எல்லாம் இந்த டிரைலர் முறியடித்திருந்தது. 5 வது நாளாக இந்தியாவில் யூடியூபில் இப்போது வரை நம்பர் 1 இடத்தில் உள்ளது.
வேறு நாடுகளில் விஸ்வாசம் பிடித்துள்ள இடம் இதோ;
சிங்கப்பூர்- நம்பர் 1
ஸ்ரீலங்கா- நம்பர் 1
மலேசியா- நம்பர் 9
Bahrain- நம்பர் 3
குவைத்- நம்பர் 4
UAE- நம்பர் 2
ஓமன்- நம்பர் 2
Oatar- நம்பர் 1 இந்தியாவை தவிர மற்ற மூன்று நாடுகளில் விஸ்வாசம் ஐந்தாவது நாளாக முதலிடத்தில் இருந்து வருகிறது. டிரெய்லர் பெற்ற வரவேற்பை அடுத்து ரஷ்யா மற்றும் உக்ரைனில் வெளியாகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.