
பிரமாண்ட பொருட் செலவில் விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் உருவாகிறது மெர்சல். மூன்று நாயகிகள், மிரட்டலான வில்லன், ஆஸ்கர் நாயகன் இசை என அனைத்திலும் பிரமாண்டம் என்று தான் சொல்லணும். கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் தெலுங்கு டீசர் வெளியாகி தமிழ் சாதனையை நெருங்கி கொண்டு இருக்கிறது.
ராஜா ராணி ஃ ப்ரம் மௌனராகம், தெறி ஃ ப்ரம் கேப்டனோட சத்ரியன் என இயக்குனர் அட்லி மீது ஒரு தரப்பினர் குறை கூறிவருகின்றனர். அதுமட்டுமல்ல தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் மெர்சல் படம் விஜயகாந்தின் பேரரசு, ரஜினியின் மூன்றுமுகம், கமலின் அபூர்வ சகோதரர்கள் மூன்று படத்தின் மிக்ஸிங் என சமூகவலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் அட்லீ ஒரு பேட்டியில் கூறியதாவது; நான் மற்ற படங்களை பார்த்து காப்பி அடிக்குறேனா? இது சுத்தப்பொய் ஒரு கதையை உருவாக்க நாங்கள் எப்படி போராடுகிறோம் என்று யாருக்காவது தெரியுமா? ஒரு அறையில் அமர்ந்து கொண்டு சுமார் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் உழைப்பு தான் ஒவ்வொன்றும் என கூறியுள்ளார்.
என்னை காப்பி என்று சொன்னவர்களுக்கு "மெர்சல்" படத்தில் வரும் ஒரு காட்சியை பார்த்து விட்டு சொல்லுங்கள் எங்கள் உழைப்பு என்ன என்று தெரியவரும். அதே போல என் திறமை, நான் யார் என்று சாவல் விடுத்துள்ளார்.
மேலும், மெர்சலில் வரும் காட்சிகள் ரசிகர்களை மெர்சலாக்கும் இதுவரை இப்படி ஒரு காட்சி வந்தது இல்லை என்று பேசும் அளவுக்கு வித்தியாசமாக இருக்கும் என்று கூறியுள்ளார் ஆக மொத்தத்தில் தளபதி ரசிகர்கள் மெர்சலாவப்போவது உறுதி!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.