மீண்டும் ஹூரோவாக களமிறங்கும் மெர்சல் வில்லன்...

 
Published : Dec 11, 2017, 09:59 AM ISTUpdated : Sep 19, 2018, 01:35 AM IST
மீண்டும் ஹூரோவாக களமிறங்கும் மெர்சல் வில்லன்...

சுருக்கம்

Mersal Villain acts as a hero

இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கும் புதிய படத்தில் மீண்டும் ஹீரோவாக களமிறங்குகிறார் மெர்சல் வில்லன் எஸ்.ஜே.சூர்யா.

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா கஸாண்ட்ரா, நந்திதா ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை.

திரில்லர் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம் பைனான்ஸ் பிரச்சனையால் இன்னும் வெளிவராமல் உள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும் "இறவாக்காலம்" படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார்.

இந்தப் படத்தையும் தொடர்ந்து "ஒரு நாள் கூத்து" படத்தின்  மூலம் புகழ் பெற்ற நெல்சன் வெங்கடேசன் இயக்கும் ஒரு படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார்.

சமீப காலங்களாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அனைத்து தரப்பினராலும் வெகுவாக ஈர்க்கப்பட்ட நடிகர் என்ற பெயரை சம்பாதித்து விட்டார் எஸ்.ஜே.சூர்யா.

இந்த நிலையில் நெல்சன் வெங்கடேசன் இயக்கும் படத்தில் ஹீரோவாக மீண்டும் களமிறங்குகிறார் எஸ்.ஜே.சூர்யா.

பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் எஸ்.ஆர்.பிரபு இப்படத்தைத் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ், ரித்விகா ஆகியோர் நடிக்கின்றனர். ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கார் விபத்து: நடுரோட்டில் பஞ்சாயத்தை முடித்து வைத்த சிவகார்த்திகேயன்! ரியல் லைஃப் 'அமரன்' என பாராட்டும் ரசிகர்கள்!
கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்