
சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் வழங்கும் 15-வது சர்வதேச சென்னை திரைப்படவிழா வரும் டிசம்பர் 14 முதல் (வியாழன்) 21 (வியாழன்) வரை நடக்கவுள்ளது.
15-வது சர்வதேச சென்னை திரைப்படவிழாவின் துவக்கவிழா டிசம்பர் 14ம் தேதி 2017, அன்று மாலை 6.15 மணிக்குச் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சூழ கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்தத் துவக்க விழாவில் நடிகர் அரவிந்த்சாமி தலைமை விருந்தினராக பங்கேற்கிறார்.
சென்னையில் உள்ள தேவி, தேவி பாலா, சத்யம், கேசினோ, அண்ணா, தாகூர் பிலிம் செண்டர், ரஷ்யன் செண்டர் ஆப் சயின்ஸ் & கல்சர் ஆகிய திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.
இந்த வருடத்தின் சிறந்த படத்திற்காகப் போட்டியிடும் 12 தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
1. 8 தோட்டாக்கள்
2. அறம்
3. கடுகு
4. குரங்கு பொம்மை
5. மாநகரம்
6. மகளிர் மட்டும்
7. மனுசங்கடா
8. ஒரு கிடாயின் கருணை மனு
9. ஒரு குப்பை கதை
10. தரமணி
11. துப்பறிவாளன்
12. விக்ரம் வேதா
மேலும் இந்த ஆண்டு திரையிடப்படும் இந்தியன் பனோரமா 12 படங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறப்பு திரையிடல் தமிழ்ப் படமாக "என் மகன் மகிழ்வன்" (My Son is Gay) படம் திரையிடப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.