
அட்லீ இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' திரைப்படம் வரும் தீபாவளிக்கு தினத்தன்று வெளியாக உள்ளது. தற்போது '. இந்த படத்தின் டீசர் இயக்குனர் அட்லீயின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை ஆறு மணிக்கு வெளியானது.
டீசர் வெளியான 10 நிமிடத்திலேயே 5 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இந்த டீசரில் விஜய் " நீ பற்ற வைத்த நெருப்பொன்று, பற்றி எரியும் மெய் கேற்கும்" "நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும்" என்று கையில் கோலி குண்டை உருட்டியவாறு வஞ்சம் தீர்க்க வந்த புலி போல் ஆக்ரோஷமாக வசனம் பேசுகிறார்.
இந்த டீசரில் விஜய் கிராமிய ஸ்டைலில் வேட்டி சட்டையுடனும், வெளிநாட்டில் உள்ளதுபோல் மிகவும் ஸ்டைலிஷாகவும் வருகிறார்.
ஆனால் படத்தில் மூன்று நாயகிகள் இருந்தும் ஒரு நாயகி கூட டீசரில் வரவில்லை என்பது வருத்தம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.