
B R விஜயலக்ஷ்மி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அபியும் அணுவும்' படத்தில் கேரளா சினிமா உலகின் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் ஒருவரான டோவினோ தோமஸுக்கு பியா பாஜபாய் ஜோடியாக நடித்துள்ளார்.
இந்த காதல் படத்தில் ஒரு முத்தக்காட்சி இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கூறியுள்ள படத்தில் இயக்குனர் விஜய லட்சுமி ''ஒரு அழகான, ஆழமான காதல் கதையை திரையில் பார்த்து வெகு காலம் ஆகிவிட்ட நிலையில் இதனை அறிந்த நானும் எனது அணியினரும் இந்த தலைமுறையின் ரசனைக்கேற்ப ஒரு அழகான மற்றும் துணிச்சலான காதல் கதையை உருவாக்கியுள்ளோம்.
இப்படத்தின் ஒரு முக்கியமான கட்சிக்காக, கதையின் தேவைக்கேற்ப டோவினோ தாமஸ் மற்றும் பியா பாஜ்பாயை வைத்து ஒரு முத்தக்காட்சியை படமாக்கியுள்ளோம்.
இந்த காட்சியை அவர்களிடம் கூறியபொழுது முழு ஒத்துழைப்பு தந்து , எந்த வித தயக்கமும் இன்றி நடித்து கொடுத்தார்கள். அக்டோபர் மாதம் 'அபியும் அணுவும்' ரிலீசாகும். இந்த வித்யாசமான, துணிச்சலான காதல் கதையை இளைஞர்கள் நிச்சயம் ரசித்து கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்'' என நம்பிக்கையோடு தெரிவித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் பிரபு, சுஹாசினி, ரோகினி , மனோபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'Yoodlee Films' தயாரிப்பில் 'அபியும் அணுவும்' உருவாகியுள்ளது.இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான சந்தோஷ் சிவன் இப்படத்தில் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.