மெர்சலா... கலர்ஃபுல்லா கலக்குதே ... மிரட்டலா இருக்குதே!

Asianet News Tamil  
Published : Oct 17, 2017, 12:24 PM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
மெர்சலா... கலர்ஃபுல்லா கலக்குதே  ... மிரட்டலா இருக்குதே!

சுருக்கம்

mersal is colorful tamil film preview

மெர்சல் திரைப்படம் பல திருப்புமுனைகளுக்குப் பிறகு சீரான ரோட்டில் டாப் ஸ்பீடில் செல்லத் தொடங்கியிருக்கிறது. டாப் கியர் போட்டு செம்ம ஸ்பீட்டில் டிக்கெட் புக்கிங் போய்கிட்டு இருக்கு. கிட்டத்தட்ட முதல் மூன்று நாட்களுக்கு மொத்தமா டிக்கெட்டுகள் க்ளோஸ். நாளை உலகம் முழுக்க சுமார் 3400 திரையரங்குகளில் வெளியாகவுள்ள இத்திரைப்படம், பட்ஜெட்டை வைத்து பார்த்தால் 2017ஆம் ஆண்டின் மிகப்பெரிய தமிழ்ப்படம்.

இரண்டு மணி நேரம் 48 நிமிடங்கள் திரையிடத் திட்டமிடப்பட்டிருக்கும் மெர்சல் திரைப்படத்துக்கு ரூ.150 கோடி செலவில் ஒவ்வொரு ஃப்ரேமிலும் (Frame) பல லட்சங்களைச் செலவு செய்து படமாக்கியிருப்பதால், ஒரு காட்சியை கூட கட் பண்ண விரும்பாததால்தான் யு/ஏ சர்டிஃபிகேட்டுக்கு ஓகே சொன்னதாம் படக்குழு. 

சரி விஷயத்துக்கு வருவோம்... தளபதிக்கு ஜோடியாக நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என மூன்று நாயகிகள். விஜய்-க்கு எதிராக மோதும் ஸ்டைலிஷான வில்லன் வேடத்தில் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார்.  மிரட்டலான ஒரு டீஸர் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இதுவரை டீஸரை 2 கோடி பார்வையாளர்களுக்கு மேல் யூ-டியூபில் கண்டு ரசித்துள்ளனர். தற்போது, 10 லட்சத்திற்கு மேல் லைக்ஸ் குவிந்த வண்ணமுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதன்முதலாக விஜய் மூன்று வேடங்களில் வருகிறார் என்றதுமே, படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறவைக்கிறது. இப்படத்தில் டாக்டராக ஒரு விஜய், மேஜிசியன் ஆக ஒரு விஜய், ஃபிளாஷ்பேக் பகுதியில் விவசாயியாகவும் மக்கள் உரிமைகளுக்காக போராடும் கிராமத்து இளைஞனாகவும் மூன்று வேடங்களில் விஜய் தோன்றியுள்ளார் என்றே சொல்லப்படுகிறது. இந்த மூன்று வேடங்களிலும் விஜய் எப்படி வருவார். ரசிகர்களை மெர்சலாக்க வைப்பாரா என எதிர்பார்ப்பும் நம்முள் ஏற்படாமல் இல்லை.

குறிப்பாக, ஃபிளாஷ்பேக்கில் வரும் அப்பா விஜய் கதாபாத்திரம் மிரட்டலாகவும், மேஜிசியன் விஜய் கதாபாத்திரம் ரொம்பவே சுவாரஸ்யமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘மெர்சல்’ திரைப்படம் ‘மூன்று முகம்’, ‘அபூர்வ சகோதரர்கள்’ திரைப்படத்தின் தழுவல் என கூறப்படுவது உண்மையா என தெரியாவிடினும் கூட, கண்டிப்பாக தந்தையின் மரணத்திற்காக ‘ரிவெஞ்ச்’ எடுக்கும் கதையாக இருக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

விஜய் ரசிகர்களை மெர்சலாக்க இன்னும் பல விஷயங்கள் இருக்கு...  போஸ்டர்களையும், டீசரையும் பார்த்தாலே அது தெரிகிறது. 25 ஆண்டுகளாக ‘இளைய தளபதி’ என அழைக்கப்பட்ட விஜய் டைட்டில் பெயரை ‘தளபதி’ விஜய் என மாற்றிய அட்டகாசமான ஐடியாவில் தொடங்கி, ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் செம கலர்ஃபுல்லா இருக்குமாம். இதுல ஒரு ஸ்பெஷல் என்னென்ன, அப்பா விஜய்க்கு பெயரே ‘தளபதி’ தான் என்றும் சொல்லப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தமிழ் சினிமாவிற்கு கிடைத்த இளம் தலைமுறை இயக்குனர்கள்! 2026-ல் இயக்குனர்களாக உதயமாகும் கென் மற்றும் ஜேசன் சஞ்சய்!
குடி போதையில் எல்லாத்தையும் உலறிய சரவணன்; அதிர்ச்சியடைந்த பழனிவேல்! "பாண்டியன் ஸ்டோர்ஸ்" குடும்பத்தில் அடுத்த வெடி!