யு/ஏ சர்டிஃபிகேட் கிடைச்சாச்சு... இனி எந்த பிரச்சனையும் இல்ல... ஹேப்பி மூடில் தளபதி பேன்ஸ்!

First Published Oct 17, 2017, 11:01 AM IST
Highlights
Mersal Gets UA Certificate Slated For Diwali Release


தளபதி நடிப்பில் தீபாவளிக்கு விருந்தாக நாளை வெளியாகவிருக்கும் மெர்சல் படத்திற்கு விலங்குகள் நல வாரியம் நேற்று மாலை பச்சைக்கொடி காட்டிவிட்டது. இதனால் இன்று மெர்சல் திரைப்படத்துக்குக் கிடைக்குமென எதிர்பார்க்கப்படும் யு/ஏ சர்டிஃபிகேட் கிடைத்துவிட்டது.

தளபதி படத்திற்கு கடைசியாக செமயா செக் வைத்ததற்கு காரணமே மெர்சல் டீமுக்கும் விலங்குகள் நல வாரியத்துடன் ஏற்பட்ட வாய்க்கால் தகராறு தான் என சொல்லப்படுகின்றன. விலங்குகளை உண்மையாக பயன்படுத்தும்போது விலங்குகள் நல ஆர்வலர்களைப் படப்பிடிப்புத்தளத்தில் சாட்சியாக வைத்துக்கொண்டே ஷூட்டிங் நடத்த வேண்டும். ஒருவேளை கிராஃபிக்ஸில் விலங்குகளை உருவாக்கினால், கிராஃபிக்ஸ் சேர்ப்பதற்கு முந்தைய காட்சியையும், கிராஃபிக்ஸ் சேர்த்ததன் பிறகான காட்சியையும் விலங்குகள் நல வாரியத்தில் சமர்ப்பித்து என்.ஓ.சி எனப்படும் சர்டிஃபிகேட்டை வாங்குவது சினிமாவின் வழக்கம்.

மெர்சல் திரைப்படத்தில் 6 காளைகள், 11 பசுக்கள், 3 கன்றுகள், 55 ஆடுகள், 7 கோழிகள், ஒரு எருது, 10 குதிரைகள், 20 ஒட்டகங்கள், ஜெர்மன் ஷெப்பர்டு நாய்கள், முயல்கள், புறாக்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தியதுடன் சில பறவைகளையும், புலியையும் கிராஃபிக்ஸில் உருவாக்கியிருக்கிறார்கள். 

கிராஃபிக்ஸில் காட்சிகள் அனைத்தும் வெளிநாட்டில் படமாக்கப்பட்டதாம். இந்தியாவில் பயன்படுத்தப்படும் விலங்குகள் வெளிநாடுகளில் குறைவு என்பதால், புலியை வைத்து படமெடுக்க முடியாது என்பதால் கிராஃபிக்ஸில் உருவாக்கியிருக்கிறார்கள். எனவே, உண்மையாகப் பயன்படுத்திய விலங்குகள் மற்றும் கிராஃபிக்ஸ் செய்யப்பட்டவையை விலங்குகள் நல வாரியத்திலிருந்து என்.ஓ.சி. வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. ஆனால் படக்குழு விலங்குகள் நல வாரியத்திற்கு டிமிக்கி கொடுத்து வந்தது.

இந்தியாவில் நடைபெற்ற ஷூட்டிங்கில் எங்கெல்லாம் விலங்குகளைப் பயன்படுத்தினார்களோ, அங்கெல்லாம் விலங்குகள் நல ஆர்வலர் ஒருவரையும் சாட்சியாக வைத்தே படமாக்கப்பட்டதாக தெரிவித்தது படக்குழு. 

ஆனால், படப்பிடிப்பு தளத்துக்கு வருகை தந்த விலங்குகள் நல ஆர்வலர் கேட்ட தகவல்களைக் கொடுக்காமல் அசிரத்தையாக இருந்ததாலும், படக்குழுவின் போக்கு திருப்திகரமாக இல்லாததாலும், ஷூட்டிங் ஸ்பாட்டுக்குச் சென்ற விலங்குகள் நல ஆர்வலர் திருப்தியடையவில்லை. விலங்குகள் இடம்பெறும் அனைத்துக் காட்சிகளையும் சிடியில் பதிவு செய்து கொண்டு வருமாறு அக்டோபர் 5ஆம் தேதி விலங்குகள் நல வாரியம் அறிவுறுத்தியிருக்கிறது. ஆனால், எந்த ப்ரூப்புமே கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாம்.

இந்நிலையில் சென்சார் போர்டும் விலங்குகள் நல வாரியத்தின் என்.ஓ.சி. இல்லாமல் தணிக்கை சான்றிதழ் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டது. அதன்பிறகு கடந்த 12ஆம் தேதி மெர்சல் படக்குழு சிடியைச் சமர்ப்பித்தபோது விலங்குகள் நல வாரியம் கையை விரித்தது. ஏனென்றால், ஒவ்வொரு புதன்கிழமை நாளில் மட்டுமே விலங்குகள் நல வாரிய உறுப்பினர்கள் ஒன்றுகூடி என்.ஓ.சி. வழங்குவார்கள். 

இதனாலேயே, நேற்று விலங்குகள் நல வாரியம் அவசர அவசரமாக ஒரு  ‘அவசரக் கூட்டம்’  போடப்பட்ட்டது. மெர்சல் படக்குழு தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆவணங்கள் மற்றும் காட்சிகளைப் பார்த்த விலங்குகள் நல வாரியம் ஒருவழியாக என்.ஓ.சி கொடுத்தது. 

இதனையடுத்து இன்று சென்சார் போர்டு ஏற்கெனவே குறிப்பிட்ட யு/ஏ சான்றிதழைக் கொடுத்துள்ளது. இதில் சிறப்பு என்னன்னா? வேகமாகப் மெர்சல் திரைப்படத்திலிருந்து ஒரு சின்ன காட்சிக்கூட நீக்கலயாம்.

click me!