என்னாது ஜூலிக்கும் ஆரவ்க்கும் லவ்வா? அப்போ ஓவியா வாழ்க்கை! புது ட்விஸ்டு’ வைக்கும் பிக் பாஸ்...

Asianet News Tamil  
Published : Jul 12, 2017, 05:26 PM ISTUpdated : Sep 19, 2018, 12:52 AM IST
என்னாது ஜூலிக்கும் ஆரவ்க்கும் லவ்வா? அப்போ ஓவியா வாழ்க்கை!  புது ட்விஸ்டு’ வைக்கும் பிக் பாஸ்...

சுருக்கம்

merina protest girl julie fellen love with aarav at bigboss

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ள நடிகர் ஆரவ் மீது, ஜல்லிக்கட்டு போராட்ட பொண்ணு ஜூலி காதல் வயப்பட்டுள்ளது போல் பேசும் ஒரு வீடியோ கிளிப்பிங்கை விஜய் டிவி தற்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மக்களை எப்போதுமே பரபரப்பாக வைத்திருப்பதில் நம்ம தொலைக்காட்சிகளை அடிச்சுக்கவே முடியாது போங்கோ... அதிலும் நம்ம விஜய் டிவி சொல்லவே வேண்டாம், ஜோடி நம்பர் ஒன் டான்ஸ் நிகழ்ச்சியில் சிம்பு அழுதது முதல், திவ்ய தர்ஷினி கமலிடம் முத்தம் வாங்கியது, இப்போது பிக் பாஸில் நடக்கும் கூத்து வரை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது விஜய் டிவியின் நட்சத்திர நிகழ்ச்சிகள்.

விஜய் தொலைக்காட்சியில் நாள்தோறும் இரவு 9 மணிக்கு   ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறிவருகிறது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் நடிகை ஓவியா, ஆராவை புரபோஸ் செய்து, எச்சைங்க, சேரி பிஹேவியர் என காயத்ரி ரகுராம் பேசியது சமூகவலை தளங்களில் கண்டனங்கள் வலுத்துவந்த நிலையில், இதை மறக்கடிக்க இன்று ‘இதோ வந்துடுச்சி புது ட்விஸ்டு’ என்ற தலைப்பில் ஒரு வீடியோவை தனது முகநூலில் வெளியிட்டுள்ளது.

அதில், தனக்கு ஆரவ் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவரை பிடித்திருப்பதாகவும் ஜூலி காயத்ரி ரகுராமிடம் கூறுகிறார். இதை  நமீதா மற்றும் சினேகன் ஆகியோரிடம் சொல்லி கிண்டலடித்து சிரிக்கின்றனர். 

இந்த கிளிப்பிங்கில் உள்ள  காட்சிகள் இன்று ஒளிபரப்பாகவுள்ளது. ஏற்கனவே, நடிகை ஓவியா, ஆராவை லவ் புரபோஸ் செய்த நிலையில்,  தற்போது ஜூலியும் ஓவியாவைப்போல காதல் வலையில் விழுந்துள்ளது  வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

நாள்தோறும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு வெஜ் விருந்து வைக்கும் இந்த பிக் பாஸ், கொலப்பசியில் இருப்பவர்களுக்கு பிரியாணியை கிடைச்சா சும்மா விடுவார்களா?

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

திருமணம் செய்ய வயது மட்டும் போதாது.. நம்பிக்கை மற்றும் புரிதல் அவசியம்! நடிகை பிரகதி ஓப்பன் பேச்சு!
ஆன்லைனில் ஏமாந்த ஜி.வி. பிரகாஷ்? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அந்த மர்ம நபர்! நடந்தது என்ன?