ஓவியாவை அறையனும்,  வெளியே வரட்டும் கை, கால்களை உடைக்குறேன்... காயத்திரியின் பகீர் பேச்சு 

Asianet News Tamil  
Published : Jul 12, 2017, 03:41 PM ISTUpdated : Sep 19, 2018, 12:52 AM IST
ஓவியாவை அறையனும்,  வெளியே வரட்டும் கை, கால்களை உடைக்குறேன்... காயத்திரியின் பகீர் பேச்சு 

சுருக்கம்

gayathiri scolding oviya

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முன்னாள் தலைவியாக இருந்தவர் நடன இயக்குனரும், நடிகையுமான காயத்திரி ரகுராம். சில நாட்களாக தன்னுடைய சுயரூபத்தை வெளியே காட்டாமல் அடக்கி வாசித்து வந்த இவர் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய மோசமான முகத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் அவர் அனைவருடனும் பேசிக்கொண்டிருந்த போது... ஓவியா ஒரு விஷம் என்றும் நேற்று இரவு பெரிய ஏழரையை கூட்டிவிட்டாள் என கூறுகிறார். அதற்கு சக்தி ஏன்? என்ன ஆனது என கேட்க, பரணியை நீங்க எப்படி வெளியில அனுப்பலாம் என கேட்கிறாள்... அதற்கு காரணம் நாம் ஆவலுடன் சண்டை போடணும் அதை பார்க்கும் மக்கள் அவளை காப்பாத்துங்க என அவள் நினைப்பதாக கூறுகிறார்.

மேலும் ஏற்கனவே நான் ஜூலி விஷயத்தில் கோபப்பட்டிருக்கிறேன், அதனால் எனக்கு தான் கெட்டபெயர். தற்போது மீண்டும் பரணி விஷயத்தில் நான் அவனை போகவிட்டுடேன் என கூறுகிறாள்... எனக்கு வரும் கோபத்திற்கு அவளை அறையனும் போல இருக்கு என்றும்... வெளியில வரட்டும் வச்சிருக்கேன் எல்லாருக்கும் அவர்கள் கால், கையை ஒடச்சி அனுப்புவேன் என கூறி சிரிக்கிறார். 

காயத்ரி தன்னை நல்லவர் என கூறி கொண்டு தொடர்ந்து இது போன்ற வில்லத்தனமான வேளைகளில் தான் ஈடுபட்டு வருகிறார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

திருமணம் செய்ய வயது மட்டும் போதாது.. நம்பிக்கை மற்றும் புரிதல் அவசியம்! நடிகை பிரகதி ஓப்பன் பேச்சு!
ஆன்லைனில் ஏமாந்த ஜி.வி. பிரகாஷ்? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அந்த மர்ம நபர்! நடந்தது என்ன?