
நடிகை பாவனா கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப்பின் மனைவி காவ்யாவின் பேஸ்புக் பக்கத்தில் சிலர் மோசமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதனை அடுத்து பேஸ்புக் பக்கத்தை காவ்யா மாதவன் முடக்கியுள்ளார்.
நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் கடந்த 10 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
நடிகை பாவனாவை ஆட்களை வைத்து காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் நடிகர் திலீப் கடந்த 10ம் தேதி கைது செய்யப்பட்டார். நடிகர் திலீப்பிற்கு எதிராக 19 ஆதாரங்கள் சிக்கியதால் அவரை கைது செய்வதாக போலீசார் கூறினர். தற்போது அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் நடிகர் திலீப்பின் மனைவியும் நடிகையுமான காவ்யா மாதவனும் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின. கைதுக்கு பயந்து காவ்யா மாதவன் வீட்டிலேயே முடங்கியுள்ளார்.
இந்த நிலையில், காவ்யா மாதவனின் பேஸ்புக் பக்கத்தில், சிலர் தவறான பதிவுகளை வெளியிட்டு வந்தனர். அது மட்டுமல்லாது திலீப் குறித்தும் பல்வேறு கமெண்டுகளை வெளியிட்டு வருகின்றனர். இதனை அடுத்து காவ்யா மாதவன் பேஸ்புக் பக்கத்தை முடக்கியுள்ளார். அதேபோல், தனது கடையின் பேஸ்புக் பக்கத்தையும் அவர் முடக்கியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.