மூன்று காதலை வெளிப்படுத்திய 'மெஹந்தி சர்க்கஸ்' திரைப்படம்!

Published : Apr 12, 2019, 05:40 PM IST
மூன்று காதலை வெளிப்படுத்திய 'மெஹந்தி சர்க்கஸ்' திரைப்படம்!

சுருக்கம்

ஒரு படைப்பை வாழும் காலமெல்லாம் நம்மோடு பயணிக்கச் செய்யும் வித்தை ஒருசில படைப்பாளிகளுக்கே கை வரும். அவர்கள் அதைத் தங்களின் முதல் படத்திலே முத்திரை போல பதித்து விடுவார்கள்.   

ஒரு படைப்பை வாழும் காலமெல்லாம் நம்மோடு பயணிக்கச் செய்யும் வித்தை ஒருசில படைப்பாளிகளுக்கே கை வரும். அவர்கள் அதைத் தங்களின் முதல் படத்திலே முத்திரை போல பதித்து விடுவார்கள். 

ராஜுமுருகனின் படங்களும் எழுத்தும் அப்படித்தான். அப்படியான ராஜுமுருகனை எழுதத்தூண்டிய அவரது அண்ணன் சரவண ராஜேந்திரன் தற்போது 'மெஹந்தி சர்க்கஸ்' என்ற திரைப்படைப்போடு வந்திருக்கிறார். 

இப்படத்தின் ட்ரைலரும் பாடல்களும் படம் தாங்கி நிற்கும் கதையின்  கணத்தை நம் மனத்திற்குள் ஏற்றியுள்ளது. இப்படியான படங்களை தயாரிப்பதன் மூலம் சினிமா மீது தனக்குள்ள காதலை நிறுவி வருகிறார் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் தயாரிப்பாளர் ஸ்டியோ க்ரீன் K.E.ஞானவேல்ராஜா. படத்திற்கு ராஜு முருகன் எழுதிய கதை வசனம் பெரும் பலம் என்றால் சரவண ராஜேந்திரனின் திரைக்கதையும் இயக்குமும் ஆகப்பெரும் பலம் என்கிறார்கள் படக்குழுவினர். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது,

விழாவில்  தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசுகையில்...

"இது காதல்படம் என்பதை படத்தின் போஸ்டர் சொல்லி இருக்கும். இந்தப்படத்தில்  மூன்று காதல் உள்ளது.  ராஜு முருகன், யுகபாரதி, சரவண ராஜேந்திரன் இந்த மூவருக்குள் உள்ள காதல் தான் முதல் காதல். 

இரண்டாவது காதல் என் அப்பாவிற்கு ஹீரோ ரங்கராஜுக்கும் உள்ள காதல். மூன்றாவது காதல் இளையராஜா மீது இசை அமைப்பாளர் ஷான் ரோல்டன் கொண்ட காதல். 

இந்த மூன்று காதலும் இந்தப்படத்தின் மூலதனம். இந்தப்படத்தின் பாடல்களை கேட்டால் ஒரு சந்தோஷம் வரும். இந்தப்படத்தில் உள்ள கேமரா மேன், எடிட்டர் உள்பட அனைவரும் அருமையாக வேலை செய்திருக்கிறார்கள். படத்தில் நடித்த அனைவரும் கலக்கி இருக்கிறார்கள். இந்த நல்லபடத்தை மீடியா நல்லபடியாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுகிறேன்" என்றார்.

இயக்குநர் சரவண ராஜேந்திரன் பேசியதாவது, 

"எல்லாரும் என்னை நிதானம் பொறுமை என்றார்கள். அது ப்ளான் பண்ணி எல்லாம் நிகழவில்லை. அந்தக் காத்திருப்புக்கான பலனாக இந்தப்படம் வந்துள்ளது. இந்தப்படத்திற்கு துவக்கப்புள்ளியாக இருந்தவர் ஈஸ்வரன் அப்பா. அவரை சக இயக்குநர்கள் பயன்படுத்துங்கள் அவருக்குள் நல்ல நடிகர் இருக்கிறார். இந்த ரங்கராஜ் ப்ரதரைப் பார்க்கும் போது இவர் நடிப்பாரா என்ற கேள்வி இருந்தது. 

ஆனால் படத்தில் அவர் ஜீவாவாக வாழ்ந்திருக்கிறார். இந்தப்படத்தில் மிக முக்கியமானவர் கேமராமேன் செல்வகுமார், அவர் சின்னப்பையனாக இருக்கிறாரே என்ற டவுட் எனக்கும் ரொம்ப பெரியாளா இருக்கிறாரே என்ற டவுட் அவருக்கும் வந்தது. ஒருமணி நேரம் நாங்கள் பேசினோம். எங்களுக்குள் இருக்கும் அலைவரிசை சரியாக இருந்தது. ஷான் ரோல்டனை சின்ன இசைஞானி என்று சொல்லலாமா? என்று கூட பேசுவோம். அவர் சூப்பர் டீலக்ஸ் க்ளைமாக்ஸ் போல பேசுவார். ஒரு ட்யூன் கொடுப்பார் ஒரே ட்யூன் தான் கொடுப்பார். அதை யுகபாரதி ஒரு மணிநேரத்தில் பாட்டாக்கி கொடுப்பார். எடிட்டர் முதலில் சீரியஸாக இருந்தார். 

அவரிடம் பேசப்பேச அவர் மிகத் தெளிவானவர் என்று புரிந்தது. நடிகை மிகப்பிரம்மாதமாக நடித்துள்ளார். மாரிமுத்து சார், விக்னேஷ் காந்த், வேல.ராமமூர்த்தி சார் உள்பட அனைத்து நடிகர்களும் மிக அற்புதமான நடிப்பை கொடுத்துள்ளார்கள். இந்தப்படம் குழந்தைகள் உள்பட அனைவரும் கொண்டாடும் படமாக இருக்கும். ஞானவேல் ராஜா படத்தைப் பார்த்த பின் என்னை வரச் சொன்னார். படம் நல்லாருக்கு என்று அவர் சொன்ன பிறகு தான் நான் உயிர்த்தெழுந்தேன்." என்றார்.
 
மெஹந்தி சர்க்கஸ் படம் வரும் 19-ம் தேதி அன்று வெளிவருகிறது என கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி