சூப்பர் ஸ்டாருக்கே இப்படியொரு சவாலா?... தரையை துடைக்க சொல்லும் மெகா ஸ்டார்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Apr 23, 2020, 11:19 AM IST
சூப்பர் ஸ்டாருக்கே இப்படியொரு சவாலா?... தரையை துடைக்க சொல்லும் மெகா ஸ்டார்...!

சுருக்கம்

#BetheREALMAN என்ற அந்த சவாலின் படி லாக்டவுன் நேரத்திலாவது தங்களது மனைவிக்கு உதவும் விதமாக வீட்டி ல் ஏதாவது வேலைகளை செய்து அந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட வேண்டும். 

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ள திரைப்பிரபலங்கள் புதுசு, புதுசாக சவால்களை உருவாக்கி வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த அர்ஜுன் ரெட்டி இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா ட்விட்டர் மூலம் பிரம்மாண்ட இயக்குநர் ராஜமெளலிக்கு சவால் ஒன்றை விடுத்தார். 

#BetheREALMAN என்ற அந்த சவாலின் படி லாக்டவுன் நேரத்திலாவது தங்களது மனைவிக்கு உதவும் விதமாக வீட்டி ல் ஏதாவது வேலைகளை செய்து அந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட வேண்டும். அந்த சவாலை நிறைவு செய்த ராஜமெளலி அந்த சவாலை ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரணுக்கு விட்டிருந்தார். இதையடுத்து வீட்டை துடைப்பது, பாத்திரம் கழுவுவது போன்ற வேலைகளை செய்து முடித்த ஜூனியர் என்.டி.ஆர்., இதேபோன்று வீட்டு வேலைகளை செய்யும் படி தெலுங்கு திரையுலகில் டாப் ஸ்டார்களான சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா ஆகியோருக்கு சவால் விட்டார். 

இதையும் படிங்க: சர்ச், மசூதிகளெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா?.. கோயில் மட்டும் தான் தெரியுதா? ஜோதிகாவை விளாசும் நெட்டிசன்கள்...!

இந்த சவாலை ஏற்றுக்கொண்ட மெகா ஸ்டார் சிரஞ்சீவி, வீட்டை சுத்தப்படுத்தி, தன் கையால் தோசை சுட்டு தனது அம்மாவிற்கு கொடுக்கும் வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த சவாலை தனது நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் நிறைவேற்ற வேண்டும் என்று ட்விட்டர் மூலமாக கோரிக்கைவிடுத்துள்ளார்.

இதையும் படிங்க: நயன்தாரா என்ன யோக்கியமா..? வாண்டடாக வம்பிழுக்கும் சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி...! 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த சவாலை ஏற்பாரா?, தனது வீட்டை சுத்தம் செய்யும் வீடியோவை சோசியல் மீடியாவில் பகிர்வாறா? என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருகின்றனர். இதற்கு முன்னதாக ஜூனியர் என்.டி.ஆர். விட்ட சவாலை ஏற்றுக்கொண்ட வெங்கடேஷ், எங்க கேங்க் லீடர் சிரஞ்சீவி முதலில் வீடியோ வெளியிடட்டும் பிறகு நான் வீடியோ வெளியிடுகிறேன் என்று சொல்லியிருந்தார். இன்னும் வெளியாகாத வெங்கடேஷ் மற்றும் நாகார்ஜுனா  வீடியோவிற்காகவும் தெலுங்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!