தாத்தா சிரஞ்சீவிக்கு... பிறந்த சில மாதத்தில் பார்த் டே வாழ்த்து கூறிய மெகா பிரின்சஸ்! வைரலாகும் போட்டோ!

Published : Aug 22, 2023, 08:06 PM IST
தாத்தா சிரஞ்சீவிக்கு... பிறந்த சில மாதத்தில் பார்த் டே வாழ்த்து கூறிய மெகா பிரின்சஸ்! வைரலாகும் போட்டோ!

சுருக்கம்

மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு அவரின் பேத்தி, பிறந்த நாள் வாழ்த்து கூறி இந்த நாளை மேலும் சிறப்பாக மாற்றிய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  

மெகாஸ்டார் சிரஞ்சீவி இன்று தன்னுடைய 68-ஆவது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளார். இரவு 12 மணியில் இருந்தே மெகா ஸ்டாருக்கு, பல ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவர்களுடன் சேர்த்து சமீபத்தில், பிறந்த சிரஞ்சீவியின் பேத்தியான கிளின் காரா- வும் வாழ்த்து கூறியுள்ளார்.

தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் பட்டத்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் சிரஞ்சீவிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான வேதாளம் படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்ட போலா ஷங்கர், திரைப்படம் தோல்வியை தழுவிய நிலையில்... மெகா ஸ்டார் அடுத்தடுத்த படங்களுக்கு தயாராகி வருகிறார். 68 வயதிலும் ஸ்ருதி ஹாசன், தமன்னா போன்ற இளம் நடிகைகளுடன் ஜோடி போட்டு நடித்து வரும் இவரின், பிறந்தநாளை முன்னிட்டு பலர் சமூக வலைத்தளம் மூலமாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தலைவர் 170 படத்தில் ரஜினிக்கு வில்லனாகும் பிரபல ஹீரோ! பூஜை மற்றும் படப்பிடிப்பு குறித்து வெளியான மாஸ் அப்டேட்!

விஜய் டிவியை காப்பி அடிக்கிறதா சன் டிவி? விரைவில் முடிவுக்கு வரும் சீரியலின் சீசன் 2 பணிகள் மும்முரம்!

மேலும் இந்த பிறந்த நாளில் சிரஞ்சீவிக்கு மிகவும் முக்கியமான ஒருவரின் வாழ்த்தும் கிடைத்துள்ளது. அதாவது சிரஞ்சீவின் மகன் ராம் சரணுக்கும், அவரின் மனைவி உபாசனாவுக்கும் சமீபத்தில் தான், அழகிய பெண் குழந்தை பிறந்தது. மெகா ஸ்டாரின் பேத்தி கிளின் காரா தாத்தாவுக்கு வாழ்த்து கூறியுள்ளார். சிரஞ்சீவி தன்னுடைய பேத்தியை கையில் ஏந்தியபடி எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, "என் அன்பான சிரஞ்சீவி தாத்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்கிற கேப்ஷனை ராம் சரண் போட்டுள்ளார்.  இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.  மெகா பிரின்சஸ் கிளின் காரா-வுடன் கொண்டாடும் இந்த பிறந்தநாள், சிரஞ்சீவிக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரூ.3 லட்சம் செலவுக்கு ரூ.80 ஆயிரம் தர்றோம்னு சொல்றாங்க" – மாகாபா ஆனந்தையே ஏமாற்றிய பங்க் நிர்வாகம்!
ஓ இது தான் 'ஜன நாயகன்' படத்தின் கதையா? பழசா இருந்தாலும் தளபதியின் மாஸ் புதுசாச்சே!