பிக்பாஸ் வின்னர் இவர்தான்...? அடித்து கூறும் மீரா!

Published : Jul 31, 2019, 12:03 PM IST
பிக்பாஸ் வின்னர் இவர்தான்...? அடித்து கூறும் மீரா!

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில், 16 ஆவது போட்டியாளராக உள்ளே நுழைந்து சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் விளையாடியவர் மீராமிதுன்.   

பிக்பாஸ் நிகழ்ச்சியில், 16 ஆவது போட்டியாளராக உள்ளே நுழைந்து சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் விளையாடியவர் மீராமிதுன். 

வனிதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, இனி பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்குமா? என அனைத்து ரசிகர்கள் மனதிலும் இருந்த கேள்விக்கு, புது புது பிரச்சனைகள் மூலம் தீனி போட்டவர் மீரா.

இவருக்கு ஒரு தரப்பு ரசிகர்கள் எதிராக இருந்தாலும், இவர் செய்து வரும் பிரச்சனைகள் நியாயமானது தான் என இவருக்கு சப்போர்ட் செய்யும் ஒரு தரப்பும் இருந்து கொண்டு தான் உள்ளது. 

இந்நிலையில், இவர் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற மாட்டார் என எதிர்பார்த்த நிலையில், திடீர் என வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின், தற்போது ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.

அந்த வகையில், இவர் கொடுத்த பேட்டி ஒன்றில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 100 நாட்கள் உள்ளேயே இருந்து வெற்றி பெரும் போட்டியாளர் யார் என எழுப்பப்பட்ட கேள்வி, சாண்டி தான் வெற்றி பெறுவார் என்றும், தர்ஷனுக்கும் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது, ஆனால் அவருக்கு எது சரி, எது தவறு என புரிந்து கொள்ளும்  முதிர்ச்சி வரவில்லை என கருதுவதாக கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Anikha Surendran : சேலையில் காந்தப் பார்வையால் மயக்கும் குட்டி நயன் 'அனிகா' சுரேந்திரன்.. குவியும் லைக்ஸ்
Rakul Preet Singh : அழகிய தீயே.. நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் ஹாட் போட்டோஸ்!!