இதனால் தான் என்னால ஜெயிக்க முடியல... இந்தி, மலையாள நடிகைகளை கொச்சைப்படுத்திய மீரா மிதுன்...!

Published : Aug 12, 2021, 01:17 PM IST
இதனால் தான் என்னால ஜெயிக்க முடியல... இந்தி, மலையாள நடிகைகளை கொச்சைப்படுத்திய மீரா மிதுன்...!

சுருக்கம்

தன்னை பற்றி பரபரப்பாக எப்போதும் அனைவரும் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்று, சர்ச்சை கருத்துக்களை கண்டமேனிக்கு பேசி வரும் மீரா மீதும், சமீபத்தில் பட்டியல் இன இயக்குனர்கள் மற்றும் மக்கள் பற்றி பேசியது, அனைத்து தரப்பு மக்களையும் கொந்தளிக்க செய்தது. 

தன்னை பற்றி பரபரப்பாக எப்போதும் அனைவரும் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்று, சர்ச்சை கருத்துக்களை கண்டமேனிக்கு பேசி வரும் மீரா மீதும், சமீபத்தில் பட்டியல் இன இயக்குனர்கள் மற்றும் மக்கள் பற்றி பேசியது, அனைத்து தரப்பு மக்களையும் கொந்தளிக்க செய்தது. சகித்து கொள்ள முடியாத அளவுக்கு பப், சிகரெட் என இருக்கும் உனக்கு என்ன தகுதி இருக்கு பட்டியல் இன மக்களை பற்றி பேச என நெட்டிசன்கள் இவரை தாறுமாறாக கிழித்து தொங்க விட்டனர்.

மேலும் இவர் மீது மதுரை, சென்னை, ஆகிய இடங்களில் புகார் கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இவரை கைது செய்யவேண்டும் என பலர் வலியுறுத்தி வந்தனர். எனவே விரைவில் இவரிடம் இதுகுறித்து விசாரணை செய்யப்படும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டு பலரையும் கடுப்பேற்றியுள்ளார் மீரா மிதுன். மேலும் தன்னை பற்றி உயர்வாக பேசி, பிரதமர் நரேந்திர மோடிக்கு சில கருத்துகளையும் முன்வைத்துள்ள மீராமீதும், தமிழகத்தில் தனக்கு எதிராக ஆண்கள் செயல்படுவதாக கூறியுள்ளார்.

அதில் குறிப்பாக... "ஒரு பெண் தமிழ் நாடியில் வளர்ச்சி அடைவது யாருக்குமே பிடிக்காது, அதிலும் ஒரு தமிழ் மொழி பேசும் பெண் வளர்ச்சி அடைவது யாருக்குமே பிடிக்காது என்றும், ஆனால் வேற்று மொழி, வேற்று மாநில பெண்கள் மட்டுமே இங்க வளர்ச்சி அடைய முடியும். காரணம் அவர்கள் இங்கிருக்கும் ஆண்களின் ஆசைக்கு இணைகுவதால் தான்.... என்று, மற்ற மொழி நடிகைகளை கொச்சை படுத்தும் விதமாக பேசியுள்ளார்.

அதே போல் தன்னுடைய இவ்வளவு பிரச்சனைக்கு காரணம், தன் மீது அனைத்து ஆண்களும் ஆசை படுவது தான் என ஒரே போடாய் போட்டுள்ளார். பின்னர் இதுகுறித்து நரேந்திர மோடி அவர்களுக்கும் தன்னுடைய பிரச்சனைகள் குறித்து பக்கம் பக்கமாய் கூறியுள்ளார். மேலும் ஒரு தமிழ் பெண், இதுவரை இமாலய வெற்றி அடைந்ததை யாரும் பார்த்தது இல்லை, யாரும் வெற்றி அடைய விடமாட்டார்கள், அனால் எல்லாமே முடிவுக்கு வரும் காலமும் விரைவில் வரும் என தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார் மீரா மிதுன்.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Nooru Saami vs Engal Thangam Day 1 Box Office : சமந்தா vs விஜய் ஆண்டனி... முதல் நாள் வசூலில் வின்னர் யார்?
Siragadikka Aasai : கடத்தப்பட்டாரா மீனா? வலைவீசி தேடும் முத்து; மனோஜுக்கு சேலஞ் பண்ணிய ரோகிணி..!