‘அண்ணாத்த’ பட இயக்குநருக்கு பிறந்தநாள்... தல ரசிகர்களின் வாழ்த்து மழையில் சிறுத்தை சிவா...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Aug 12, 2021, 12:18 PM IST
‘அண்ணாத்த’ பட இயக்குநருக்கு பிறந்தநாள்... தல ரசிகர்களின் வாழ்த்து மழையில் சிறுத்தை சிவா...!

சுருக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், குஷ்பு,  மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்து வரும் அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார்.

தற்போதைக்கு தமிழ் சினிமாவில் சென்டிமெண்ட் கதைக்கு பெயர் போன இயக்குநர்கள் சிலரே, அதில் சிறுத்தை சிவா முக்கியமான இடத்தை தக்கவைத்துள்ளார். பக்காவான பேமிலி சென்டிமெண்ட் கதையில், நடு நடுவே மாஸ் சீன்களை கலந்து, அதிரடி ஆக்‌ஷன் ப்ளஸ் அளவான கவர்ச்சியோடு கொடுப்பதில் கைநேர்ந்தவர். கார்த்தி, தமன்னா நடிப்பில் வெளியான சிறுத்தை படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக சிவா அறியப்பட்டிருந்தாலும், சிறுத்தை சிவா என்றாலே ரசிகர்களுக்கு நினைவுக்கு வருவது அஜித் - சிவா வெற்றிக் கூட்டணி தான். 

வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என அஜித்தை வைத்து தொடர்ந்து 4 படங்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. கோட்சூட்டிலேயே ஸ்டைலிஷ் ஹீரோவாக வலம் வந்த அஜித்தை சால்ட் அண்ட் பேப்பர் லுக்கில் வேட்டி, சட்டையில் களமிறக்கி வீரம் படத்தில் வெற்றி கண்டார். முற்றிலும் மாறுபட்ட இரண்டு தோற்றம் மற்றும் கதாபாத்திரத்தில் வேதாளத்தில் புகுந்து விளையாடினார். தமிழ் சினிமாவில் தல அஜித்தை இதை விட கெத்தாக யாருமே காட்ட முடியாது என விவேகம் படத்தை ரசிகர்கள் தலைமேல் வைத்துக் கொண்டாடச் செய்தார். அப்பா - மகள் சென்டிமெண்ட்டில் புகுந்து விளையாடி விஸ்வாசம் படத்தில் அஜித் ரசிகர்களை கண்ணீர் வடிக்கவிட்டார். இப்படி ரசிகர்களின் பல்ஸ் அறிந்த மந்திரக்காரர். 

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், குஷ்பு,  மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்து வரும் அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார். இதில் அண்ணன் - தங்கை சென்டிமெண்ட்டை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அண்ணன் கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டாரும், தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடித்துள்ளார்களாம். படத்தில் பெரும்பாலான ஷூட்டிங் காட்சிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது டப்பிங் பணிகள் தீயாய் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் சிறுத்தை சிவா இன்று தன்னுடைய 44வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையடுத்து 2019ம் ஆண்டு படக்குழுவுடன் ரஜினி கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை சோசியல் மீடியாவில் ஷேர் செய்து சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் விதவிதமாக சிறுத்தை சிவாவிற்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். சைடு கேப்பில் அண்ணாத்த அப்டேட்டும் கேட்டு வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

5 பேருடன் அட்ஜஸ்ட் செய்தால் பிரபல நடிகருக்கு மனைவியாக நடிக்கும் வாய்ப்பு: மிர்ச்சி மாதவி ஷாக் பதிவு!
ஜன நாயகன் 2ஆவது சிங்கிள் எப்போது? இதோ வந்துருச்சுல அப்டேட்!