என்னை கைது செய்வது கனவிலும் நடக்காது... நேரு, காந்தியோடு ஒப்பிட்டு காவல்துறையையே கடுப்பேற்றும் மீரா மிதுன்!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Aug 12, 2021, 10:27 AM IST
என்னை கைது செய்வது  கனவிலும் நடக்காது... நேரு, காந்தியோடு ஒப்பிட்டு காவல்துறையையே கடுப்பேற்றும் மீரா மிதுன்!

சுருக்கம்

மீரா மிதுன் ‘தாராளமாக என்னை கைது செய்யுங்கள் என்றும்,  ஏன் காந்தி, நேரு எல்லாம் சிறைக்கு போகவில்லையா..?ஆனால், என்னை கைது செய்வது என்பது நடக்காது  என்றும் போலீசாருக்கு சவால் விடும் விதமாக தெரிவித்துள்ளார். 

சோசியல் மீடியாவில் பப்ளிசிட்டி தேடுவதற்காக சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு வருபர் மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதில் ஆரம்பித்து என் மூஞ்சியை எல்லா நடிகைகளும் திருடிட்டாங்க என பீதி கிளப்பியது வரை மீரா மிதுனின் பப்ளிசிட்டி அலப்பறைகள் அளவில்லாதது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யாவைப் பற்றியும், அவர்களது மனைவியான சங்கீதா, ஜோதிகா பற்றியும் மிகவும் தரக்குறைவாக பேசி மீரா மிதுன் வீடியோ வெளியிட்டது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது. 

இந்த விவகாரத்தில் ரசிகர்களைக் கடந்து சோசியல் மீடியாவில் திரையுலகினர் பலரும் கூட கடுமையான விமர்சனங்களை மீரா மிதுன் மீது முன்வைத்தனர். இன்ஸ்டாகிராமில் ஆடையில்லாமல் புகைப்படங்களை பதிவிடுவது, யூ-டியூப்பில் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களை பற்றி ஆபாசமாக பேசி வீடியோ வெளியிடுவது என சுற்றி வந்த மீரா மிதுன், சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று பெரும் பிரச்சனையாக வெடித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய யூ-டியூப் பக்கத்தில்  தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களை மிகவும் அவதூறாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசி மீரா மிதுன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

 எனவே மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய வேண்டுமென புரட்சி பாரதம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னி அரசு உள்ளிட்டோர் அளித்த புகாரின் அடிப்படையில் சைபர் க்ரைம் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 32/2021 U/s 153,153A(1) (a),505 (1) (b),505 (2) IPC and section 3(1) (r),3(1)(s), (3)(1) (u) of sc &ST Prevention Act 1989-ன் ஆகிய 7 பிரிவுகளின் கீழ் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்த விசாரணைக்கு ஆஜராகும் படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர்.இது தொடர்பாக மீரா மிதுன் விரைவில் கைது செய்யப்படுவார் என கூறப்பட்டு வந்த நிலையில், அவர் தலைமறைவாகிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் மீரா மிதுன் ‘தாராளமாக என்னை கைது செய்யுங்கள் என்றும்,  ஏன் காந்தி, நேரு எல்லாம் சிறைக்கு போகவில்லையா..?. ஆனால், என்னை கைது செய்வது என்பது நடக்காது  என்றும் போலீசாருக்கு சவால் விடும் விதமாக தெரிவித்துள்ளார். மேலும் அப்படி நடந்தால் அது உங்கள் கனவில் தான் நடக்கும் என்றும் சவடாலாக தெரிவித்துள்ளது சர்ச்சையை பூதாகரமாக்கியுள்ளது. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

5 பேருடன் அட்ஜஸ்ட் செய்தால் பிரபல நடிகருக்கு மனைவியாக நடிக்கும் வாய்ப்பு: மிர்ச்சி மாதவி ஷாக் பதிவு!
ஜன நாயகன் 2ஆவது சிங்கிள் எப்போது? இதோ வந்துருச்சுல அப்டேட்!