
நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடித்து வரும் #RAP019 என்ற தலைப்பிடப்படாத படத்தை ஆனந்தம், ரன், சண்ட கோழி, பையா, வேட்டை, அஞ்சான் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய N.லிங்குசாமி இயக்கி வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் #RAP019 படத்தில் கதாநாயகியாக கிரித்தி ஷெட்டி நடிக்க ஆதி வில்லனாக நடிக்கின்றார். நதியா மற்றும் ஜெய பிரகாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் கதாநாயகனான ராம் பொத்தினேனி சென்னையில் படித்தவர் என்பதால் சரளமாக தமிழ் பேசுவாராம். தெலுங்கில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள ராம் பொத்தினேனி சமீபத்தில் வெளியான Ismart Shankar, ரெட் என தொடர் வெற்றிகளை தெலுங்கில் கொடுத்துள்ளார்.
இயக்குனர் லிங்குசாமி - ராம் பொத்தினேனி - ஆதி என்ற காம்பினேஷனில் உருவாகும் இப்படத்தின் இந்தி சாட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் 16 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. நடிகர் ராம் பொத்தினேனி நடித்த படங்களில் அதிக விலைக்கு ஹிந்தி சாட்டிலைட் விற்கப்பட்ட படம் என்ற பெருமையை "RAPO19" திரைப்படம் பெற்றுள்ளது. மேலும் இப்படத்தின் தமிழ் சாட்டிலைட் உரிமையை பெற பிரபல தொலைக்காட்சி நிறுவனத்திடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மிக விரைவில் அதன் விவரம் வெளியிடப்படும். ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு 50 சதவிகிதம் முடிந்துள்ளது. பிரம்மாண்டமான முறையில் பெரும் பொருட்செலவில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் தமிழக உரிமையை ‘MasterPiece’ நிறுவனம் பெற்றுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.