​“உங்களால் தான் என் கனவுக்கு உயிர் கிடைத்தது”... சிவகார்த்திகேயனின் உதவிக்கு மருத்துவ மாணவி உருக்கம்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Nov 20, 2020, 01:29 PM IST
​“உங்களால் தான் என் கனவுக்கு உயிர் கிடைத்தது”... சிவகார்த்திகேயனின் உதவிக்கு மருத்துவ மாணவி உருக்கம்...!

சுருக்கம்

எனது மருத்துவ கனவிற்கு உயிர் கொடுக்க பலரும் உதவி செய்தனர். நடிகர் சிவகார்த்திகேயன் செய்த உதவியால் இன்று எனது கனவு நனவாகியுள்ளது. 

நடிகர் சிவகார்த்திகேயன் தனது சொந்த செலவில் தஞ்சாவூரைச் சேர்ந்த மாணவி சஹானாவுக்கு நீட் தேர்வில் பயிற்சியில் படிக்க வைத்தார். இந்நிலையில் அவருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.இந்த தகவல் சிவகார்த்திகேயனுக்கு மட்டுமல்ல அந்த மாணவியின் குடும்பத்தாரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 12ஆம் வகுப்பு தேர்வில் 600க்கு 524 மதிப்பெண்கள் எடுத்து உயர் படிப்பை தொடர தனக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று சஹானா என்ற மாணவி கேட்டிருந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பூக்கொல்லை என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சித்ரா. இருவரும் கூலி தொழிலாளர்கள். இவர்களுக்கு தேவிபாலா ரூபவ், சஹானா என இரண்டு பெண்கள் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக வீடு இல்லாத நிலையில், தென்னை மரத்தின் அடியில் சிறிய குடிசை அமைத்து குடியிருந்து வருகின்றனர். அந்தக் குடிசையில் மின்சார வசதி இல்லை. இவர் வசிக்கும் பகுதி கஜா புயலால் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தது.மண்ணெண்ணை விளக்கு வெளிச்சத்தில் படித்த மூத்த மகள் தேவிபாலா தற்போது தனியார் கல்லூரி ஒன்றில் எம்.எஸ்.சி முதலாமாண்டு படித்து வருகிறார். கூலி வேலை செய்யும் பெற்றோரால் பெரிய மகளையே படிக்க வைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

 

இதையும் படிங்க: நலம் விசாரிப்பு மட்டும் அல்ல... நடிகர் தவசிக்கு சூப்பர் ஸ்டார் செய்த உதவி...!

இந்த நிலையில் இரண்டாவது மகள் சஹானா பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து 10ம் வகுப்பில் 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்று இருந்தார். அதே பள்ளியில் தற்போது 12ஆம் வகுப்பு தேர்வில் 600க்கு 524 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியிலேயே முதல் மதிப்பெண் எடுத்துள்ளார்.மருத்துவத்திற்கு படித்து ஏழை எளிய மக்களுக்கு சேவை ஆற்ற வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்து வந்த சஹானா  டிசம்பர் 5ம் தேதி நடைபெற்ற  நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார். 

நடிகர் சிவகார்த்திகேயன்,மாணவி சஹானாவுக்கு நீட் பயிற்சிக்கான மொத்த செலவையும் நடிகர் ஏற்றிருந்தார்.இந்த நிலையில் சஹானாவுக்கு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.மாணவி சஹானாவுக்குப் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவி சஹானா சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

 

இதையும் படிங்க:  விஜய் டி.வி.யின் பிரபல சீரியல் நடிகை திடீர் மாற்றம்... குழப்பத்தில் ரசிகர்கள்...!

எனது மருத்துவ கனவிற்கு உயிர் கொடுக்க பலரும் உதவி செய்தனர். நடிகர் சிவகார்த்திகேயன் செய்த உதவியால் இன்று எனது கனவு நனவாகியுள்ளது. அவர் என் மருத்துவ படிப்பிற்கான முழு செலவையும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி அரசு பள்ளி மாணவர்களுக்காக முதலமைச்சர் பிறப்பித்த உள் ஒதுக்கீட்டு ஆணையும் தனது மருத்துவ கனவை நிறைவேற்றியதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

25 ஆண்டுகளில் முதன்முறையாக படையப்பா படம் பார்த்த ரம்யா கிருஷ்ணன்... இத்தனை வருஷமா ஏன் பார்க்கல தெரியுமா?
கடைசியில் மீனாவிடம் 'சென்டிமென்ட்' டிராமாவை அரங்கேற்றிய தங்கமயில்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 விறுவிறுப்பு!