பக்கா பிளான்! நம்பி ஏமார்ந்த அர்ச்சனா.. இந்த முறை ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்பட்ட 6 போட்டியாளர்கள்! வீடியோ

By manimegalai a  |  First Published Nov 6, 2023, 2:33 PM IST

பிக்பாஸ் வீட்டில் இந்த வார கேப்டனாக பதவி ஏற்றுள்ள மாயா, பக்கா பிளான் போட்டு... அர்ச்சனா மற்றும் தினேஷை ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பியுள்ளதாக கொந்தளித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
 


இந்த வாரம், பிக்பாஸ் வீட்டில் அனைத்து விஷயங்களில் பங்கெடுத்துக்கொண்ட, 3 போட்டியாளர்களை பிக்பாஸ் தேர்வு செய்ய சொன்னார். இதில் பிக்பாஸ் வீட்டை சேர்ந்தவர்கள் மாயா மற்றும் கூல் சுரேஷ் ஆகிய இருவரை தேர்வு செய்து கூறினர். ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்து விசித்ரா தேர்வு செய்யப்பட்டார். இவர்கள் மூன்று பேருக்கும் வைக்கப்பட்ட டாஸ்கில், மாயா வெற்றி பெற்று இந்த வார கேப்டனாக மாறினார்.

இந்நிலையில் இந்த வார கேப்டனான மாயா, பிக்பாஸ் கொடுத்த வசனங்கள் அடிப்படையில்... 6 போட்டியாளர்களை தேர்வு செய்து, இந்த முறை ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பியுள்ளார். அதில் குறிப்பாக அர்ச்சனா மற்றும் தினேஷை டார்கெட் செய்து அனுப்பியுள்ளார் என்பது, வீடியோவை பார்த்தாலே தெரிகிறது என்றும், அர்ச்சனாவை மாயா ஏமாற்றிவிட்டார் என தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Tap to resize

Latest Videos

டூப் போடாமல் சிங்கத்துடன் சண்டை! நொறுங்கிய எலும்பு! அரிய தகவல்களுடன் கமலுக்கு வாழ்த்து கூறிய சிவகுமார்!

பிக்பாஸ் இரண்டு நபர்கள் ரூல்ஸ் பிரேக் பண்ண தயங்க மாட்டாங்க, என்று மாயாவிடம் கேட்டதற்க்கு பூர்ணிமாவை காப்பாற்றிவிட்டு, விசித்ரா மற்றும் கூல் சுரேஷ் ஆகிய இருவரை கோர்த்து விட்டார். இதை தொடர்ந்து, இரண்டு நபர்கள் ரூல்ஸ் பிரேக்கிங்கில் ஒருத்தர் பண்ணா, நானும் அதையே செய்றேன்னு போறவங்க, என கேட்டதற்கு மணி மற்றும் ரவீனா என இரண்டு போரையும் தேர்வு செய்தார். இவ்வளவு நாள் நீங்க எதுவும் பண்ணல, இனிமேலாவது ஏதாவது செய்யுங்கள் என்கிற வசனத்திற்கு பொருத்தமானவர் என கேட்கப்பட்டதற்கு, அர்ச்சனா - தினேஷ் ஆகிய இருவரை டார்கெட் செய்து ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பினார். தினேஷ் இதுபற்றி கேட்டதற்கு ஏதேதோ பதில் கூறி மழுப்பினார் மாயா. மாயாவின் இந்த தேர்வு அன் ஃபேர் என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். அர்ச்சனா மனம் நொந்து அழுத போது  கூட, இந்த முறை பிக்பாஸ் வீட்டில் இருங்கள் என ஒரு பொய்யான வாக்குறுதியை தான் மாயா கொடுத்துள்ளார் என விளாசி வருகிறார்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அதே நேரம் தனக்கு நெருக்கமானவர்கள் மட்டும், மாயா சேவ் பண்ணி மிகவும் தந்திரமாக விளையாடி வருவதாகவும் கூறி வருகிறார்கள். அப்படி தான் பிரதீபுக்கு ரெட் கார்டு கொடுத்து தூக்கினார்கள். இதை தொடர்ந்து பிராவோவுக்கு ரெட் கார்டு கொடுக்க திட்ட தீட்டி வருகிறது மாயா கேங் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!