மதுமிதாவின் மூக்கை உடைத்த முகேன்! பரபரப்பான பிக்பாஸ் வீடு!

Published : Aug 02, 2019, 06:15 PM IST
மதுமிதாவின் மூக்கை உடைத்த முகேன்! பரபரப்பான பிக்பாஸ் வீடு!

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது பிரோமோவில், நடிகை மதுமிதாவின் மூக்கு உடைந்து, ரத்தம் கொட்டியதால் பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது பிரோமோவில், நடிகை மதுமிதாவின் மூக்கு உடைந்து, ரத்தம் கொட்டியதால் பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

பிக்பாஸ் வீட்டில் இன்றைய தினம், நடிகர் சரவணன் மற்றும் சேரனுக்கு இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சேரனை மரியாதை குறைவாக சரவணன் பேசிய காட்சிகள் பிரோமோவில் வெளியானது.

இதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள பிரோமோவில், இன்று பிக்பாஸ் வீட்டின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான போட்டி நடக்கிறது. இதில் 'போடு ஆட்டம் போடு' டாஸ்கில் சிறப்பாக தங்களுடைய கேரக்டரை வெளிப்படுத்திய சாண்டி, முகேன், மற்றும் மதுமிதா ஆகியோர் பங்கு பெறுகிறார்கள்.

இவர்களுக்காக மூன்று ஷூக்கள் ஒட்டப்பட்ட கட்டைகள் கொடுக்கப்படுகிறது. இதை காலில் மாட்டி கொண்டு மூவரும் நடக்க வேண்டும் இவர்களில், இருவரை கீழே தள்ளி விட்டு தரையில் கையை ஊன்ற செய்தால் அவர் இந்த போட்டியில் இருந்து வெளியேறுவார்.

மது மற்றும் சாண்டியை கீழே தள்ளி விட வேண்டும் என்கிற நோக்கில் பின்னால் இருந்த, முகேன் கட்டையை பின்னால் பக்கம் இழுக்க அதில் நிலை தடுமாறி, மது மற்றும் சாண்டி கீழே விழுகிறார்கள். இதில் மதுவின் மூக்கில் அடிப்பட்டு, ரத்தம் கொட்டுகிறது. இதனால் போட்டியாளர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை கொடுக்கும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2025-ல் 100 கோடிக்கு மேல் வசூலை வாரிசுருட்டியும் அட்டர் பிளாப் ஆன டாப் 5 படங்கள்
விஜய் முதல் கார்த்தி வரை... 2025-ம் ஆண்டு ‘ஜீரோ’ ரிலீஸ் உடன் ஏமாற்றம் அளித்த டாப் ஹீரோக்கள்