அப்பா - மகன் என இருவருடனும் ஜோடி போடும் கீர்த்தி சுரேஷ்!

Published : Aug 02, 2019, 05:29 PM ISTUpdated : Aug 02, 2019, 05:31 PM IST
அப்பா - மகன் என இருவருடனும் ஜோடி போடும் கீர்த்தி சுரேஷ்!

சுருக்கம்

நடிகை கீர்த்தி சுரேஷ்  தற்போது மோகன்லாலுக்கு ஜோடியாக வரலாற்று சிறப்பு மிக்க உருவாகி வரும்,  படத்தில் நடித்து வரும் நிலையில்,  இதைத் தொடர்ந்து அவருடைய மகனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக, 'இது என்ன மாயம்' படத்தில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த படம் வெற்றிபெற வில்லையென்றாலும், இவர் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த 'ரஜினி முருகன்' மிகப்பெரிய வெற்றிபெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து, தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும், விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்தார். மேலும் தமிழை தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், இந்தி, உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வரும் படத்தில்,  அஜய்தேவ்கனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.  மேலும் தொடர்ந்து பாலிவுட் படங்களின் நடிக்க கதை கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து மலையாளத்தில்,  மோகன்லால் நடிக்கும் வரலாற்று படமான மரக்கார் அராபிகளிண்டே சிம்ஹம்  என்னும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து,  கீர்த்தி சுரேஷ் மோகன்லாலின் மகள் மகன் பிரணவுக்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்க உள்ளதாகவும்,  இந்த படத்தை வினித் சீனிவாசன் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.  கீர்த்தி சுரேஷ் பல படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு திரையுலக வாழ்வில், மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது கடந்த வருடம் வெளியான நடிகர் திலகம் நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமான மகாநடி  என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஒன்னில்ல ரெண்டில்ல அடுத்தடுத்து 5 புது சீரியல்களை களமிறக்கும் சன் டிவி - அதன் முழு லிஸ்ட் இதோ
விஜயகாந்த் மகன் ஹீரோவாக பாஸ் ஆனாரா? ஃபெயில் ஆனாரா? கொம்புசீவி விமர்சனம் இதோ