உலக நாடுகளை அடுத்து, இந்திய மக்களையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால், ஊரடங்கு உத்தரவு போடுவதற்கு முன்பே, மக்கள் ஒன்று கூடும் இடங்களான திரையரங்கம், கோவில்கள், மால்கள் போன்றவை மூடப்பட்டது.
உலக நாடுகளை அடுத்து, இந்திய மக்களையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால், ஊரடங்கு உத்தரவு போடுவதற்கு முன்பே, மக்கள் ஒன்று கூடும் இடங்களான திரையரங்கம், கோவில்கள், மால்கள் போன்றவை மூடப்பட்டது.
மேலும் தற்போது உள்ள சூழலை கருத்தில் கொண்டு, ஏற்கனவே போடப்பட்ட ஊரடங்கை, மேலும் சில தினங்களுக்கு மத்திய அரசு நீடித்துள்ளது. ஒரு சில துறையில் வேலை செய்பவர்களுக்கு சில தளர்வுகள் கொண்டு வந்தாலும், ஏப்ரல் 20 ஆம் தேதியில் இருந்து ஊரடங்கு மிகவும் கடுமையாக இருக்கும் என்பதையும் அறிவித்துள்ளார் பிரதமர்.
மே 3 ஆம் தேதியோடு ஊரடங்கு நிறைவடைந்தாலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சில கட்டுப்பாடுகள் இருக்கும் என்றே எதிர்பார்க்கபப்டுகிறது. கொரோனாவின் தீவிரம் அடங்கும் வரை மக்கள் பாதுகாப்பு கருதி திரையரங்கங்கள் மற்றும் மால்கள் திறக்கப்படுமா என்கிற சந்தேகமும் உள்ளது.
எனினும், விஜய் ரசிகர்கள் அனைவரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி நடித்திருக்கும் மாஸ்டர் படத்திற்கு செம்ம வைட்டிங். மே மாதம் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்ததும் ஒரு சில வாரங்கள் கழித்து திரையரங்கம் திறந்தால், தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு (மே 22 ) 'மாஸ்டர்' படம் வெளியாக வாய்ப்புள்ளதாக கருதுகிறார்கள் .
ஒருவேளை விஜய் ரசிகர்களின் இந்த ஆசை மட்டும் நிறைவேறினால், தளபதியின் இந்த வருட பிறந்தநாள் மாஸ் பிறந்தநாளாக இல்லை மாஸ்டர் பிறந்தநாளாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.