மெரினா புரட்சி படத்துக்கு மீண்டும் தடை... ரிவைசிங் கமிட்டியும் கைவிரித்தது...!

Published : Nov 08, 2018, 03:54 PM IST
மெரினா புரட்சி படத்துக்கு மீண்டும் தடை... ரிவைசிங் கமிட்டியும் கைவிரித்தது...!

சுருக்கம்

ஜல்லிக்கட்டு போராளிகளின் உணர்வுகளை மய்யக்கருத்தாகக் கொண்டு இயக்கப்படுள்ள ‘மெரினா புரட்சி’ படத்தை ஏற்கனவே சென்சார் போர்டு காரணம் சொல்லாமல் நிராகரித்தநிலையில் தற்போது ரிவைஸிங் கமிட்டியும் நிராகரித்துள்ளது.

சமீபத்தில் ரிலீஸாகி பரபரப்பாக பந்தாடப்பட்டுவரும் ‘சர்கார்’ உட்பட டஜன்கணக்கான படங்கள் தங்கள் படத்தை சமர்ப்பித்து வருவது ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்காக. ஆனால் அதே ஜல்லிக்கட்டு போராளிகளின் உணர்வுகளை மய்யக்கருத்தாகக் கொண்டு இயக்கப்படுள்ள ‘மெரினா புரட்சி’ படத்தை ஏற்கனவே சென்சார் போர்டு காரணம் சொல்லாமல் நிராகரித்தநிலையில் தற்போது ரிவைஸிங் கமிட்டியும் நிராகரித்துள்ளது.

இதுகுறித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ள படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான எம்.எஸ்.ராஜ்,’’ ஏற்கனவே காரணம் சொல்லாமல் சென்ஸார் போர்டு எங்கள் படத்தை நிராகரித்த நிலையில், தற்போது படத்தை பார்த்த நடிகை கவுதமி தலைமையிலான Revising Committee குழு எந்த காரணமும் சொல்லாமல் மீண்டும் தடை விதித்துள்ளனர். 

Indian Cinematograph Act 1983 விதியின்படி Revising Committee மறுப்பு தெரிவித்தால் FCAT எனப்படும் டெல்லி டிரிப்யூனல் சென்று தணிக்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்பது வழக்கமான நடைமுறை. ஆனால் மெரினா புரட்சி படத்திற்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு 2nd Revising Committee க்கு படம் அனுப்பப்பட்டிருக்கிறது.

காரணமின்றி நிராகரிப்பதும் காலதாமதம் செய்வதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட விலங்குகள் நல அமைப்பின் கடிதம் தான் இந்த தடைக்கு காரணமாக இருக்குமோ எனும் ஐயம் எழுகிறது. 

தமிழர்களின் பெருமை மிகு அடையாளமான ஜல்லிக்கட்டு போராட்டத்தை உரத்த குரலில் சொல்லும் மெரினா புரட்சி படத்தை  முடக்கும் அனைத்து சதிகளையும் முறியடிக்க நாச்சியாள் பிலிம்ஸ்  குழுவினர் உறுதியுடன் இருக்கிறோம்’ என்று தெரிவிக்கிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!