’தனுஷோட நிழலைக் கூட என்னால நெருங்க முடியலை’ போட்டு உடைக்கும் மாரிசெல்வராஜ்!!

By sathish kFirst Published Oct 12, 2018, 10:25 AM IST
Highlights

உதவி இயக்குநர்களிடம் ஒரு பத்து நிமிடம் கதை கேட்கக்கூட நேரம் ஒதுக்காமல் உதாசீனம் செய்வதில் நம் தமிழ் ஹீரோக்களை யாரும் மிஞ்சமுடியாது. அவ்வாறு பல ஹீரோக்களால் உதாசீனம் செய்யப்பட்ட ‘பரியேறும் பெருமாள்’ இன்று பலரது கவனத்தையும் ஈர்த்த வெற்றிப்படம்.

உதவி இயக்குநர்களிடம் ஒரு பத்து நிமிடம் கதை கேட்கக்கூட நேரம் ஒதுக்காமல் உதாசீனம் செய்வதில் நம் தமிழ் ஹீரோக்களை யாரும் மிஞ்சமுடியாது. அவ்வாறு பல ஹீரோக்களால் உதாசீனம் செய்யப்பட்ட ‘பரியேறும் பெருமாள்’ இன்று பலரது கவனத்தையும் ஈர்த்த வெற்றிப்படம்.

தனது ‘பரியேறும் பெருமாள்’ திரையேறிய கதையைப்பற்றி மனம் திறந்து பகிர்ந்துகொண்ட இயக்குநர் மாரிசெல்வராஜ்,’ தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளம் என்னோட சொந்த ஊர். படிப்பை பாதியில விட்டுட்டு பொழைப்புக்காக சென்னைக்கு ஓடிவந்துட்டேன். இங்க வந்த பிறகு தான் வாழ்க்கையை நகர்த்துறது அவ்வளவு சுலபம் இல்லைன்னு யதார்த்தத்தை புரிஞ்சிக்கிட்டேன்.

கொஞ்சநாள் தி.நகர் பிரபலமான துணிக்கடையில வேலை பார்த்தேன். அடுத்துநுங்கம்பாக்கம் சாஸ்திரிபவன் பக்கத்துல ஒரு பெட்ரோல் பங்க்ல நைட் வாட்ச்மேன் வேலை. சம்பளம் மாசம் ஆயிரம் ரூபாதான். அடுத்து ஒரு வீட்டுவேலை இப்படி நிறைய கஷ்டப்பட்டபிறகுதான் டைரக்டர் ராம்கிட்ட அசிஸ்டெண்ட் ஆனேன்.

‘பரியேறும் பெருமாள்’ கதை ரெடியான உடனே முதல்ல தனுஷ்க்கு சொல்லத்தான் முயற்சி பண்ணுனேன். எவ்வளவோ அலைஞ்சும் அவரோட நிழலைக் கூட நெருங்க முடியலை. அப்புறம் நடிகர் ஜெயராமோட மகன் காளிதாஸை சந்திச்சி இந்தக் கதையை சொன்னேன். அவரு தனக்கு கதை சுத்தமா புடிக்கலைன்னு சொல்லிட்டார்.

இந்த சமயத்துலதான் நடிகர் கதிர் போன் பண்ணி கதையை நானே தயாரிக்கிறேன்னு சொன்னார். நல்லவேளை சரியான சமயத்துல டைரக்டர் பா.ரஞ்சித் என்னைத் தத்தெடுத்துக்கிட்டார்’ என்கிறார் மாரிசெல்வராஜ்.

click me!