உலக அளவில் உச்சத்தைத் தொட்ட ரவுடி பேபி பாடல் … யுவனுக்கு குவியும் வாழ்த்துகள் !!

Published : Jan 19, 2019, 08:14 PM IST
உலக அளவில் உச்சத்தைத் தொட்ட ரவுடி பேபி பாடல் … யுவனுக்கு குவியும் வாழ்த்துகள் !!

சுருக்கம்

நடிகர் தனுஷ் தயாரிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில்  வெளியான மாரி 2 படத்தில் இடம் பெற்றுள்ள ரவுடி பேபி பாடல்  யூ டியூப்பில்  உலக அளவில் சாதனை படைத்துள்ளது. இந்தப் பாடலை இது வரை 9 கோடியே 65 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இது விரைவில் 10 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலாஜி  மோகன் இயக்கத்தில் தனுஷ் – சாய் பல்லவி நடித்த மாரி 2 கடந்த மாதம் 21 ஆம் தேதி வெளியானது. ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற இந்தப் படம் பாடலுக்காகவும் நன்றாக ஓடியது.

இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ரவுடி பேபி பாடல் ரசிகர்கள் மத்தியில்  பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கடந்த 2 ஆம் தேதி இந்தப் பாடல் யூ டியூப்பில்  வெளியிடப்பட்டது. இது விஜயின் மெர்சல் படத்தில் இடம் பெற்ற ஆளப் போறான் தமிழன் பாடலை முந்தி சாதனை படைத்துள்ளது. ஆளப்போறான் தமிழன் பாடல் 9 கோடியே 10 லட்சம் ரசிகர்களைப் பெற்றது,

தற்போது ரவுடி பேபி பாடல் 9 கோடியே 65 லட்சம் ரசிகர்களைப் பெற்றுள்ளது. இது விரைவில் 10 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தப் பாடலுக்கு 10 லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது.

இதே போல் தி ஹாலிவுட் ரிப்போர்டர் பத்திரிக்கையின் பில் போர்டில் டாப் 5 பாடல்களில் ஒன்றாக ரவுடி போபி பாடல் இடம் பெற்றிருந்தது. பில் போர்டில் இடம் பெறும் முதல் தமிழ் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பாடகி தீ மற்றும் தனுஷ் ஆகியோர் பாடிய இந்தப் பாடலை தனுஷ் எழுதியுள்ளார். பிரபு தேவா நடனம் அமைத்திருந்தார். உலக அளவில் இந்தப் பாடல் டிரெண்ட் ஆனதால் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Karuppu : சூர்யாவின் கருப்பு படத்தை கட்டாயம் பார்க்கத் தூண்டும் டாப் 5 காரணங்கள் என்னென்ன?
Sunny Leone Net Worth | அடேங்கப்பா கிளாமர் குயின் சன்னி லியோன் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?