"ஆம்..ஆம் மிகவும் சமநிலையாக இருக்கிறது"...அயோத்தி தீர்ப்பு குறித்து மனுஷ்ய புத்திரன்...

By Muthurama LingamFirst Published Nov 9, 2019, 3:53 PM IST
Highlights

அயோத்தி வழக்கில், மத நல்லிணக்கம் போற்றி நாட்டின் பன்முகத் தன்மைக்கு எவ்வித சேதாரமும் ஏற்படாமல் எச்சரிக்கை உணர்வுடன் முன்னெடுத்து செல்வார்கள் என்று உறுதியாக நம்புவதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள நிலையில், அத்தீர்ப்பை மிகக் கடுமையாக விமர்சித்து தனது கவிதை ஒன்றின் மூலம் ஆதங்கத்தை வெளிப்பட்டுத்தியுள்ளார் அக்கட்சியைச் சேர்ந்த மனுஷ்ய புத்திரன்.
 
அயோத்தி தீர்ப்பு குறித்து சற்று முன்னர் தனது முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள கவிதையில்....

எனக்கு முக்காலி செய்து தந்த தச்சன்
முக்காலியில் ஒரு கால் பொருத்த மறந்துவிட்டான்
இன்னொரு காலில் பாதி மட்டுமே இருந்தது
ஒரே ஒரு கால் மட்டும் முழுமையாக இருந்தது
அமரச் சொல்லி
' சமநிலையில் இருக்கிறதா?" என்றார்கள்
"ஆம்..ஆம் மிகவும் சமநிலையாக இருக்கிறது" என்றேன் தட்டுத்தடுமாறி சரிந்தபடி
" பிறகு ஏன் ஒரு பக்கமாக சரிகிறாய்?" என்று கேட்கிறார்கள்

ஒன்றுமில்லை
நான் கொஞ்சம் குடித்திருக்கிறேன்
அதனால்தான் சமநிலை குலைகிறேன்
எனக்குத்தான் முக்காலியில் சமநிலையில்
உட்காரத் தெரியவில்லை

மற்றபடி இதைவிட
சமநிலையுள்ள முக்காலியை
யாரும் தயாரிக்க முடியாது...என்று பதிவு செய்திருக்கிறார்.

click me!