திரையுலகிற்கு ரூ.10 ஆயிரம் கோடி நஷ்டமாம் - மன்சூர் அலிகான் திடீர் போர்க்கொடி

First Published Dec 2, 2016, 11:18 AM IST
Highlights


செல்லாத நோட்டுகள் அறிவிப்பால் சினிமா தொழில் முற்றிலும் முடங்கி போய்விட்டது ரூ.10 ஆயிரம் கோடி நஷ்டம் என மன்சூர் அலிகான் கூறியுள்ளார் . 
இது பற்றிய செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார் . அவரது அறிவிப்பு வருமாறு :

ஊடக நண்பர்களுக்கு வணக்கம். , இன்று மாலை 6 மணிக்கு பத்திரிகையாளர்களை அவசர நிமித்தமாக சந்திக்கிறேன்

பிரதமர் மோடியின் கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கை காரணமாக 500/1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. 
இதன் காரணமாக சினிமா தொழில் முற்றிலும் முடங்கியது. 

படப்பிடிப்பு எல்லாம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள்  பாதிக்கப்பட்டுள்ளார்கள். 
இந்த திடீர் அறிவிப்பால் சுமார் 10 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 

அதோடு முடிந்த படங்களை ரிலீஸ் செய்யமுடியாமல் இருக்கிறார்கள். 


எனவே, ஏற்கனவே நடைமுறையில் இருந்த 500/1000 ரூபாய் நோட்டுக்களை திரையரங்குகளில் வாங்க அனுமதிக்க வேண்டும். வங்கிகளுக்கு கொடுத்தது போல மார்ச் 31வரை திரையரங்குகளில் 500/1000 ரூபாய் வாங்க அனுமதி அளிக்க வேண்டும். 
இது தொடர்பாக இன்னும் பல தகவல்கள் குறித்து நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்து செய்தி வெளியிடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
என்று அறிவித்துள்ளார்.

click me!