நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்த நிலையில், அதுகுறித்து நடிகர் மன்சூர் அலிகான் விளக்கம் அளித்து இருக்கிறார்.
தமிழ் திரையுலகில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும், காமெடியனாகவும் கலக்கி வருபவர் மன்சூர் அலிகான். இவர் அண்மையில் நடிகை திரிஷா குறித்து கொச்சையாக பேசிய இருந்தார். இந்த விவகாரம் நடிகை திரிஷா பார்வைக்கு சென்றதும் அவர் மன்சூர் அலிகானை கடுமையாக சாடி இருந்தார். இதையடுத்து குஷ்பு, ரோஜா உள்பட ஏராளமான நடிகைகள் மன்சூர் அலிகானை சரமாரியாக விமர்சித்தனர். பின்னர் மகளிர் ஆணையம் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியது.
இந்த நிலையில், இந்த சர்ச்சை குறித்து முதன்முறையாக பேசி இருக்கிறார் மன்சூர் அலிகான். அவரது வீட்டில் நடந்த பிரஸ்மீட்டில் அவர் கூறியதாவது : “கடைசியா நடந்த பிரஸ்மீட்டில் ஹீரோயின்களுக்கு சினிமாவில் முக்கியத்துவம் தரப்படுவதில்லை என வைரமுத்து ஆதங்கப்படுவதாக ஒருவர் கேள்வி கேட்டார். அதனால் ஹீரோயின்களை மகிமைப்படுத்தும் விதமாக தான் எனக்கே வேலை கிடைப்பதில்லை எனக்கூறி பேசி இருந்தேன்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த விவகாரத்தில் நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறு செஞ்சிருக்கு. என்கிட்ட விளக்கமே கேட்காம மன்னிப்பு கேட்க சொல்லி நோட்டீஸ் அனுப்பிருக்கீங்க. நடிகர் சங்கத்துக்கு 4 மணிநேரம் டைம் தாரேன். நேற்று வெளியிட்ட பிரஸ் ரிலீசை வாபஸ் வாங்கிருங்க. அதுல எல்லார் முன்னாடி மண்டியிட்டு மன்னிப்பு கேட்க சொல்லிருக்கீங்க. நான் மன்னிப்பு கேட்குற ஜாதியாடா டேய். இதில் இமாலய தவறு செஞ்சிருக்கீங்க. நான் அமைதியா இருக்கேன். எரிமலையாய் குமுறினால் துண்டக்காணோம், துணிய காணோம்னு ஓட விட்ருவேன்.
நடிகர் சங்கத்தில் உள்ள நாசர், விஷால் யாருமே போன் போட்டா எடுக்க மாட்டுறாங்க. மன்சூர் அலிகான் என்ன அனாதை பிணமா. நான் எழுந்தால் ஒரு பிரளயமே கிளம்பும். மக்களுக்கு என்னைப்பற்றி தெரியும், தமிழ்நாடே என் பக்கம் இருக்கு. மக்களை காப்பாற்ற வேண்டிய இக்கட்டான சூழ்நிலைல இருக்கேன். 4 மணிநேரத்துல பிரஸ் ரிலீசை வாபஸ் வாங்கிட்டு எனக்கு நோட்டீஸ் அனுப்புங்க, பதில் சொல்ல அவகாசம் கொடுங்க” என கோபத்துடன் பேசி இருக்கிறார் மன்சூர் அலிகான்.
இதையும் படியுங்கள்... பன்னி கணக்கையே 10 விதமா எழுதுனாரு... பருத்திவீரன் படத்தில் அமீர் செய்த திருட்டு வேலைகளை தோலுரித்த பிரபலம்