Actor's Marriage Hall : பிரபலங்கள் பலர் லட்சங்களில் சம்பாரிக்க துவங்கிய பிறகு தாங்களுக்கு என்று தனியாக தொழில் துவங்குவது ஒன்றும் புதிதான விஷயமல்ல. அந்த வகையில் அரவிந்த் சாமி முதல் நயன்தாரா வரை பலரும் தனி தொழில் துவங்கி செயல்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் ஒரு சிறந்த நடிகராகவும், இயக்குனராகவும் முன்னணி நடன இயக்குனராகவும் திகழ்ந்து வரும் ஒருவர் ஒரு பிரம்மாண்ட திருமண மண்டபம் கட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்த கல்யாண மண்டபம் தனது ரசிகர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
லட்சங்களில் சம்பளம் வாங்கும் நடிகர் மற்றும் நடிகைகள் விரைவில் ஒரு வியாபாரத்தை துவங்குவது ஒன்றும் புதிதல்ல, ஆனால் இந்த நடிகர் தன் தாயில் பெயரில் கோவில் கட்டிய ஒரு மனிதர். இன்றளவும் பல மாற்றுத்திறனாளிகளுக்கு அவர் பல உதவிகளை செய்து வருகின்றார். தன்னால் முடிந்த அளவில், தொண்டு செய்யும் பலரையும் ஊக்குவித்து வருகின்றார்.
ஆம் நீங்கள் கணித்தது சரி தான், நடிகர் ராகவ லாரன்ஸ் தான் விரைவில் அந்த திருமண மண்டபத்தை கட்டவுள்ளார். அதற்காக சென்னையில் இடம் கூட அவர் பார்த்துவிட்டதாகவும், விரைவில் அந்த பிரம்மாண்ட மண்டபத்தை அவர் கட்டவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மண்டபம் அவருடைய ரசிகர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ராகவ லாரன்ஸ் சிறு வயது முதலே நடன கலைஞராக திகழ்ந்து வருகின்றார், ஏற்கனவே பல அறக்கட்டளைகள் மூலம் பலருக்கு உதவி வரும் லாரன்ஸ் புதிதாக மண்டபம் ஒன்றையும் கட்டவுள்ளார். அண்மையில் வெளியான ஜிகர்தண்டா படம் அவருக்கு மாபெரும் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. ராகவ லாரன்சிடம் சுமார் 16 கோடிக்கும் மேல் சொத்து உள்ளது என்று கூறப்படுகிறது.