
லியோ பட வெற்றி விழாவில், தனக்கு திரிஷாவுடன் காட்சிகள் அமைக்கப்படவில்லை என்று கூறி வருத்தப்பட்ட மன்சூர் அலி கான், நடிகை மடோனாவை தனது சகோதரியாக காண்பித்ததற்கும் வருத்தப்பட்டு பேசினார். மேலும் ஒரு தனியார் சேனலில் பேசிய அவர், திரிஷாவை கட்டிலில் தூக்கி வீசி கற்பழிக்கும் காட்சிகள் இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் அதெல்லாம் நடக்கவில்லை என்று கூறி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து அவருடைய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த திரிஷா, தனது வருத்தத்தை பகிர்ந்துகொண்டார், அதை தொடர்ந்து பெண்கள் தேசிய மகளிர் ஆணையதின் உறுப்பினராக இருக்கும் குஷ்பூ நிச்சயம் மன்சூர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார், அவரை தொடர்ந்து அரசியல் தலைவரும் நடிகருமான ரோஜாவும் மன்சூர் அலி கானை எதிர்த்து பதிவு ஒன்றை வெளியிட்டார்.
இந்நிலையில் திரிஷாவிற்காக பரிந்து பேசும் நடிகை குஷ்பூ, அன்று சீமான் என்னை விபச்சாரி, 4 திருமணம் செய்தவர் நான் என்றெல்லாம் கூறும் பொது எங்கே சென்றார் என்ற கேள்வியை முன்வைத்துள்ளார் நடிகை விஜயலக்ஷ்மி. இது குறித்து ஒரு காணொளியையும் அவர் வெளியிட்டுள்ளார். பாஜகவிற்கு ஆதரவாக சீமான் இருப்பதால் குஷ்பூ அவரை கண்டுகொள்வதில்லை என்றும் கூறியுள்ளார்.
மன்சூர் அலி கான் பேச்சு தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ள நிலையில், லோகேஷ் உள்பட பலரும் அவருக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் தான் தவறே செய்யவில்லை என்று உறுதிபட பேசியுள்ளார் மன்சூர் அலி கான்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.