முடிவுக்கு வருகிறது ‘பொன்னியின் செல்வன்’... வெளியானது பரபரப்பு அப்டேட்...!

By Kanimozhi PannerselvamFirst Published Aug 8, 2021, 9:46 PM IST
Highlights

சுமார் 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்து இருப்பதாகவும் இன்னும் ஒரு மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க பொன்னியின் செல்வன் படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வரும் மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இதில் விக்ரம், ஜெய்ராம்,  சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், பிரபு, லால், ரியாஸ் கான், விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, கார்த்தி, அஸ்வின்,  த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. டெக்னிக் சையிலும் இசைக்கு ஏ.ஆர்.ரகுமான், ஒளிப்பதிவிற்கு ரவிவர்மன், கலைக்கு தோட்டாதரணி என ஜாம்பாவன்கள் டீம் களமிறங்கியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும், இன்னும் அதிகரித்துள்ளது. 


அதிலும் குறிப்பாக மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் களமிறங்கியுள்ளதால் யார் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. சமீபத்தில் பிரபல வார இதழில் யார் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்பது குறித்த தகவல்கள் கெட்டப் ஓவியத்துடன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டப்பட்டது. பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன், சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜ், ஆழ்வார்க்கடியனாக ஜெயராம் ஆதித்ய கரிகாலனாக சியான் விக்ரம், வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா நடிப்பது உறுதியாகியுள்ளது. மணிரத்னத்தின் ஃபேவரைட் ஹீரோயினான ஐஸ்வர்யா ராய் நந்தினி கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. 

அரங்குகள் அமைக்காமல் மலை மற்றும் வனப்பகுதிகளில் பெரும்பகுதியான படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. சுமார் 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்து இருப்பதாகவும் இன்னும் ஒரு மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க பொன்னியின் செல்வன் படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு பாகமாக உருவாகி வரும் இப்படத்தின் முதல் பாகம் அடுத்த வருடம் கோடையில் வெளியாக உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் பொன்னியின் செல்வன் படத்தில் முதல் பாகத்தில் 6 பாடல்களும், 2-ம் பாகத்தில் 6 பாடல்களுமாக மொத்தம் 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

click me!