
கத்துக்குட்டி என்ற படத்தின் இயக்குனர் து ப சரவணன் இயக்கத்தில் சசிக்குமார் மற்றும் ஜோதிகா நடிப்பில் உடன்பிறப்பே என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் ஜோதிகாவுக்கு அண்ணனாக சசிக்குமாரும், கணவராக சமுத்திரகனியும் நடித்துள்ளார்களாம். இந்த படத்தின் போஸ்டர் நேற்று வெளியான நிலையில், படம் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் எப்போதுமே அண்ணன் தங்கை சென்டிமெண்ட் படங்களுக்கு தனி இடம் உண்டு. பாசமலர் சிவாஜி கணேஷ் - சாவித்ரி, கிழக்கு சீமையிலே விஜயகுமார் - ராதிகாவில் ஆரம்பித்து அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகும் படங்கள் தமிழ் சினிமாவில் என்றென்றைக்கும் தமிழ் சினிமாவில் கல்லா கட்டுவது நிச்சயம். சமீபத்தில் சிவகார்த்திகேயன் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான அண்ண - தங்கை சென்டிமெண்ட் படமான எங்கள் வீட்டு பிள்ளை கலவையான விமர்சனங்களை பெற்ற போதும், வசூலில் குறைவைக்கவில்லை.
அதேபோல் உடன்பிறப்பே படத்தில் தங்கையாக வரும் ஜோதிகா அண்ணன் சசிகுமார் மற்றும் கணவர் சமுத்திரகனி இடையே மாட்டியே எப்படி அல்லாடுகிறார் என்பது தான் கதையேவாம். ஜோதிகாவின் நடிப்பில் பொன்மகள் வந்தாள் படத்திற்கு பிறகு இப்படியொரு கதையை திரையில் காண ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.