Maniratnam New Movie : இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.... மணிரத்னம் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகும் பிரபல பாடகர்!!

Ganesh A   | Asianet News
Published : Jan 09, 2022, 11:43 AM IST
Maniratnam New Movie : இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.... மணிரத்னம் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகும் பிரபல பாடகர்!!

சுருக்கம்

மணிரத்னம் இயக்கத்தில் தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் தயாராகி உள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில், அடியே பாடல் மூலம் தமிழ் திரையுலகில் பாடகராக அறிமுகமானவர் சித் ஸ்ரீராம். ஏ.ஆர்.ரகுமானே அறிமுகம் செய்ததால், இவருக்கு அடுத்தடுத்து முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பாடும் வாய்ப்பு எளிமையாக கிடைத்தது.

அந்த வகையில், அனிருத், டி இமான், யுவன் சங்கர் ராஜா, இளையராஜா, சந்தோஷ் நாராயணன் என அனைவரது இசையிலும் இவர் பாடிய பாடல்கள் தனித்துவமாக விளங்கியதோடு மட்டுமின்றி இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இவர் தெலுங்கில் பாடினாலும் அப்பாடல் தமிழ்நாட்டில் ஹிட்டாகும் அளவுக்கு இவரின் பாடல்களுக்கென தீவிர ரசிகர்கள் இருக்கிறார்கள்.

முன்னணி பாடகராக இருக்கும் இவரை, இயக்குனர் மணிரத்னம் தனது தயாரிப்பில் வெளியான ‘வானம் கொட்டட்டும்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். 

இந்நிலையில், அடுத்ததாக பாடகர் சித் ஸ்ரீராமை தனது படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகப்படுத்த மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் தயாராகி உள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதன் இரண்டாம் பாகத்தின் பணிகளை இந்த ஆண்டு இறுதியில் தொடங்க திட்டமிட்டுள்ள மணிரத்னம், அதற்கு முன் ஒரு படத்தை எடுக்க முடிவு செய்துள்ளாராம். அந்த படத்தில் தான் அவர் சித் ஸ்ரீராமை ஹீரோவாக நடிக்க வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தன்னுடைய திரையுலக கதாநாயகன் அஜித் குமாரை சந்தித்த நடிகர் சிம்பு!
பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!