சிம்புவுக்கு டாக்டர் பட்டம்... வேல்ஸ் பல்கலைக்கழகம் அறிவிப்பு... இதான் உண்மையான காரணமா...?

Published : Jan 09, 2022, 05:53 AM IST
சிம்புவுக்கு டாக்டர் பட்டம்... வேல்ஸ் பல்கலைக்கழகம் அறிவிப்பு... இதான் உண்மையான காரணமா...?

சுருக்கம்

திரைத்துறையில் சிம்புவின் சிறப்பான பங்களிப்பை பாராட்டி அவருக்கு டாக்டர் பட்டம் வழங்குகிறது வேல்ஸ் பல்கலைக்கழகம்.

உலகெங்கிலும் உள்ள பல்கலை கழகங்கள, கலைத்துறையில் சாதனைபடைத்த நபர்களுக்கு ஆண்டுதோறும கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி வருகிறது. ஏற்கனவ எம்ஜிஆர், சிவாஜி, கமல்ஹாசன். விக்ரம், விஜய் ஆகியோர் கவுரவ டாக்டர் பட்டம் வழங்ககப்பட்டதை தொடர்ந்து தற்போது அந்த வரிசையில் சிம்பு இணைய உள்ளார். சிம்புக்கு வரும் ஜனவரி 11-ந் தேி இந்த டாக்டர் பட்டம் வழங்கப்பட் உள்ளது.

இந்த அறிவிப்பு சிம்பு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், பொது ரசிகர்கள் கடுமயான விமர்சனங்களை கொடுத்து வருகிறன்றனர்.பல்வேறு துறையில் சிறந்து செயலாற்றியவர்கள் பற்றிய விவரங்களை ஆய்வு செய்யும் குழுவின் பரிந்துரையின் பெயரிலேயே இந்த பட்டம் அவருக்கு வழங்கப்படுகிறது.

ஆறு மாத குழந்தையாக திரையில் அறிமுகமான சிம்பு தற்போது 39 வயதை எட்டி பிடித்திருக்கிறார், பாடலாசிரியர், பாடகர், இயக்குனர், நடிகர் என்று பல்வேறு பரிணாமங்களை கொண்ட சிம்புவுக்கு இந்த விருது வழங்கப்படுவதில் வேல்ஸ் பல்கலைக்கழகம் பெருமை கொள்வதாக அவர் கூறினார்.

சமீபத்தில் வெளியான மாநாடு படம் வெற்றியைத் தொடர்ந்து கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடிக்கிறார், இதனைத் தொடர்ந்து ‘கொரோனா குமார்’ என்ற படத்தில் சிம்பு ஒப்பந்தமாகி இருக்கிறார், இவ்விரு படங்களையும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை சிம்புவின் கால்ஷீட்டுக்காக தான் இப்படி ‘டாக்டர்’ பட்டம் கொடுக்கிறார்களோ ?  என்ற கேள்வி திரைத்துறையில் எழுந்து இருக்கிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?