மணிரத்தினத்தின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்!

 
Published : Sep 16, 2017, 07:12 PM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
மணிரத்தினத்தின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்!

சுருக்கம்

Manirathnam next movie official announcement

தமிழ் சினிமாவில் நடிகர்களை தவிர்த்து, இயக்குநருக்கான படத்தைப் பார்த்து வரும் ரசிகர்களும் உண்டு. அப்படி தன்னுடைய வித்தியாசமான படைப்பின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தார் இயக்குனர் மணிரத்னம்.

இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த 'காற்று வெளியிடை' திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக அமைத்தது. இதன் காரணமாக இந்த படம் தோல்வியடைந்தது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து மல்டி ஸ்டார் படத்தை இயக்க மணிரத்னம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டது. தற்போது இதுகுறித்து அதிகார பூர்வ தவகவல் வெளியாகியுள்ளது. 

இந்தப் படத்தில் நடிகர் சிம்பு, விஜய்சேதுபதி, அரவிந்த்சாமி, பகத் பாசில்  ஆகிய நான்கு பேர்  கதாநாயகர்களாக நடிக்கின்றனர். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஜோதிகா ஆகியோர் தற்போது நாயகிகளாக கமிட் ஆகியுள்ளனர்.

மற்ற நடிகர் நடிகைக்கான தேர்வு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை மணிரத்னம் 2018 ஜனவரி மாதம் துவங்கவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்திற்கு மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்  மேலும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை தன்னுடைய 17 வது படமாக தயாரிக்கஉள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் ஒன்று சேர்ந்த பழனிவேல் – சரவணன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் டுவிஸ்ட்!
ரேவதிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய கார்த்திக்; சந்திரகலா ஷாக், சாமுண்டீஸ்வரி ஹேப்பி; கார்த்திகை தீபம் டுவிஸ்ட்!