ஆணாக இருந்து பெண்ணாக மாறும் சர்ச்சை கதாப்பாத்திரத்தில் சிம்பு பட நடிகை!

By manimegalai a  |  First Published Apr 21, 2019, 6:59 PM IST

தமிழில் நடிகர் சிம்பு மற்றும் நயன்தாரா நடித்த, 'இது நம்ம ஆளு' படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை அடா ஷர்மா. அதே போல் பிரபுதேவா நடிப்பில் வெளியான 'சார்லி சாப்ளின் 2 ' படத்திலும் நடித்திருந்தார்.
 
தமிழில் இவர் எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடிக்க முயற்சித்து வருகிறார்.

Tap to resize

Latest Videos

இந்நிலையில் இவர் தற்போது,  ஒரு ஹிந்தி படத்தில் கமிட் ஆகியுள்ளார். Man to Man என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் அடா சர்மா ஆணாக இருந்து பெண்ணாக மாற அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

ஆணாக இருந்து பெண்ணாக மாறும் ஒருவரை, திருமணம் செய்து கொண்ட பின்,  இந்த உண்மை ஹீரோவிற்கு தெரியவர, அவரை ஏற்று கொள்கிறாரா, இதனால் என்ன பிரச்சனைகள் வருகிறது என்பது தான் இந்த படத்தின் கதை.

இந்த படம் பற்றி அடா சர்மா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

click me!