
தல அஜித் வாக்களிக்கச் சென்ற இடத்தில் நடந்த இரண்டு சம்பவங்கள் பற்றிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக வலம் வருகின்றன. வாக்குப்பதிவு நாளன்று காலை 7 மணிக்கே அஜித், அவரது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் வாக்களித்தார். எப்போதுமே, வரிசையில் நிற்கும் அஜித் இம்முறை அவ்வாறு செய்யவில்லை.
அஜித் எப்பொழுதுமே வரிசையில் நின்று தான் ஓட்டு போடுவார். இம்முறை அவர் முதல் ஆளாக வாக்களித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் அவர் வரிசையில் நிற்காமல் உள்ளே செல்ல ஒரு பெண் அவரை திட்டும் வீடியோ வெளியாகியது. அஜித், ஷாலினி வந்த கார் கதவை போலீஸ்காரர் ஒருவர் திறந்து விட்டது சர்ச்சையாகி வெடித்துள்ளது. ஒரு நடிகரின் கார் கதவை போலீஸ்காரர் எதற்காக திறக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தல அஜித்தை ஒரு பெண் திட்டிய வீடியோவை விஜய் ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்துள்ளனர்.
அஜித்தை இளம் பெண் ஒருவர் திட்டி வெளியிட்ட வீடியோவை விஜய் ரசிகர்கள் மரண கலாய் கலாய்த்துள்ளனர். எங்க தளபதி வரிசையில் நின்று வாக்களித்தார் ஆனால் உங்க தல வரிசையில் நிர்க்கமால் இப்படி போகிறாரே என என்று கலாய்த்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.