’என் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு’...பால்காவடி பஞ்சாயத்துக்கு பதில் சொல்லும் லாரன்ஸ்...

Published : Apr 21, 2019, 05:23 PM IST
’என் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு’...பால்காவடி பஞ்சாயத்துக்கு பதில் சொல்லும் லாரன்ஸ்...

சுருக்கம்

உயிரைப் பணயம் வைத்து பால்காவடி எடுத்துத் தனது கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் தொண்டரின் செயலைக் கண்டு மிகவும் வேதனையும் அதிர்ச்சியும் அடைந்ததாக நடிகர் ராகவா லாரன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  

உயிரைப் பணயம் வைத்து பால்காவடி எடுத்துத் தனது கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் தொண்டரின் செயலைக் கண்டு மிகவும் வேதனையும் அதிர்ச்சியும் அடைந்ததாக நடிகர் ராகவா லாரன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சில மணி நேரங்களுக்கு முன்பு, இரு தினங்களுக்கு முன் வெளியான ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா 3’ படத்துக்கு அவரது வெறியர் ஒருவர் முதுகில் அலகு குத்தி ராட்சத கிரேன் ஒன்றின் உதவியுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் பாலாபிஷேகம் செய்யும் வீடியோ ஒன்றை ‘மூடர் கூடம்’ இயக்குநர் நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அதோடு,...இது போன்ற மூடத்தனத்தையும் முட்டாள் ரசிகர்களையும் வளர்ப்பதால் நடிகர்கள் வளரலாமே தவிர நாடு வளறாது. இதை தடுப்பது சம்மந்தப்பட்ட நடிகர்களின் முக்கிய கடமையாக கருத வேண்டும். நீங்கள் மனிதநேயமிக்க நல்ல மனிதர் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டம் இது @offl_Lawrence என்று ஒரு விழிப்புணர்வுக் குறிப்பையும் இணைத்திருந்தார்.

அந்த வீடியோவும் நவீனின் கருத்தும் வலைதளங்களில் வைரலான நிலையில், தமிழ் ரசிகர்களுக்குப் புரிந்துவிடாதபடி’என் ரசிகர்களுக்கும் நன்பர்களுக்கு ஒரு முக்கிய செய்தி’ என்று தலைப்பிட்டு  ஆங்கிலத்தில் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ள லாரன்ஸ்...இதுபோன்ற தவறான செயல்களில் ரசிகர்கள் ஈடுபடவேண்டாம். உங்களுக்காக ஒரு குடும்பம் காத்திருக்கிறது என்பதை மறக்கவேண்டாம். என் மீது செலுத்தும் அன்பு உண்மையானதாக இருந்தால் வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு கல்வி,உணவு அளித்து உதவுங்கள்’ என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஒருத்தர விடல; வீடு புகுந்து எல்லோரையும் தூக்கிய போலீஸ்: பாக்கியத்தின் ரிவெஞ்ச் ஸ்டார்ட்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அதிரடி புரோமோ!
ரசிகர்களின் மனதை திரும்பவும் கொள்ளை கொண்ட அந்த ஒரு சீன் எது தெரியுமா? கார்த்திகை தீபம் சீரியல்!