Mammootty : அட... இவங்கெல்லாம் மம்முட்டியோட ஃப்ரெண்ட்ஸா!! நீங்க நம்பலேனாலும் அது தான் நிஜம்

By Ganesh Perumal  |  First Published Jan 9, 2022, 12:21 PM IST

நடிகர் மம்முட்டி சமீபத்தில் தனது கல்லூரி நண்பர்களை சந்தித்த போது, பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 


மலையாள திரையுலகில் 40 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகராக ஜொலித்து வருபவர் மம்முட்டி. இவர் மலையாளத்தில் மட்டும் இன்றி, தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்து புகழ்பெற்றவர். குறிப்பாக தமிழில் இவர் நடித்த, அழகன், ஆனந்தம், தளபதி, ஆகிய படங்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

இவருடைய மகனும் தற்போது, பல்வேறு தென்னிந்திய மொழி படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். ஆனால் இருவரையும் ஒருசேர பார்த்தால், அப்பா மகன் என கூறுவதை விட அண்ணன் தம்பி என்றே சொல்வார்கள். அந்த அளவிற்கும் தற்போதுவரை மிகவும் இளமையாக காட்சியளிக்கிறார் மம்முட்டி.

அதற்கு மற்றொரு சான்றாக தன்னுடன் படித்த கல்லூரி மாணவர்கள் உடனான இவரது சமீபத்திய சந்திப்பை செல்லாம். ஏனெனில், இவரது நண்பர்கள் அனைவரும் வயதான தோற்றத்துடன் இருக்க, அதில் மம்முட்டி மட்டும் யூத்தாக மின்னுகிறார். இவருக்கு 70 வயது ஆகிறது என்று சொன்னால் யாரால் தான் நம்ப முடியும். அந்த அளவுக்கு இளமை ஊஞ்சலாடுது.

எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில் பி.ஏ. படித்தார் மம்முட்டி. அப்போது தன்னுடன் பயின்ற மாணவர்களுடன் இன்றளவும் தொடர்பில் இருக்கும் அவர், சமீபத்தில் அவர்களை சந்தித்த போது, பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. 

click me!