
கோவை சூலூர் விமானப் படை தளத்தில் இருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் ராணுவ ஹெலிகாப்டரில் பயணித்தனர். இந்த ஹெலிகாப்டர் காட்டேரி பார்க் என்ற இடத்தில் மலைமுகட்டில் சிக்கி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 14 வீரர்களில் 13 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்திருந்தது.
இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விபத்திற்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று விமானப்படை தெரிவித்துள்ளது.
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகாவின் உடல்கள் ராணுவ முழு மரியாதையுடன் 17 சுற்று பீரங்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செய்யபட்டு, உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் பிபின் ராவத் மறைவு குறித்து வெளியான செய்திகளில் சிலர் மகிழ்ச்சி குறியீட்டுடன் கமெண்ட் செய்துள்ளனர். இதனால் கடுப்பான முஸ்லீம் இயக்குனர் ஒருவர் தனது மதத்தையே மாற்றியுள்ளார்.
மலையாள திரையுலகில் அறியப்பட்ட இயக்குனர் அலிஅக்பர் இவர் ஜெனரல் பிபின் ராவத் மரணத்தை இந்தியாவை சேர்ந்த இஸ்லாமியர்கள் கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்லாமில் இருந்து இந்து மதத்துக்கு மாறியுள்ளார். அதோடு அலிஅக்பர் என்கிற தனது இயற்பெயரை ராமசிம்கா என மாற்றிவிட்டதாக தெரிவிதித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.