மலையாள திரைப்பட நடிகர் கைலாஷ் நாத், கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மலையாள திரையுலகில் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமான கைலாஷ் நாத் உடல்நல குறைவு காரணமாக காலமானார். 65 வயதாகும் இவர்... கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கைலாஷ் பல மலையாள மொழி படங்களிலும். சீரியல்களிலும் நடித்துள்ளார்.
ஜீவானந்தம் யார் தெரியுமா? உடைந்தது சஸ்பென்ஸ்... இதை தாங்குவாரா குணசேகரன்! 'எதிர்நீச்சல்' அப்டேட்!
கைலாஷுக்கு ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக தொடர்ந்து அவர் மருத்துவரை அணுகி சிகிச்சைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் லில் சிரோசிஸ் என்ற நோயால் இவர் பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது அவருக்கு கல்லீரல் ஈரல் அழற்சி தொடர்பான நோய் ஏற்பட்டது. இதனால் அவருக்கு கலீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர்கள் அறிவுடுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த கலீரல் பாதிப்பு நோயால்... தொடர்ந்து இவரின் உடல்நிலை மோசமாகிக்கொண்டே செல்ல சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரின் மறைவு திரையுலகி சேர்ந்த பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இவர் மலையாளத்தை தாண்டி சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான, ஒருதலை ராகம் படத்தில் தம்பு என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து, பாலைவன சோலை, வள்ளி உள்ளிட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.