அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘ரசவாதி'- The Alchemist’..! முக்கிய அப்டேட் வெளியானது..!

Published : Aug 05, 2023, 02:42 PM IST
அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘ரசவாதி'- The Alchemist’..! முக்கிய அப்டேட் வெளியானது..!

சுருக்கம்

தொடர்ந்து, வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து ஹீரோவாக நடித்து வரும் அர்ஜுன் தாஸ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள ரசவாதி- The Alchemist’ படம் குறித்த முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.   

விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட 'மௌன குரு' மற்றும் 'மகாமுனி' போன்ற தனது திரைப்படங்களின் மூலம் பார்வையாளர்களிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர் இயக்குநர் சாந்தகுமார். இந்த இரண்டு படங்களிலும் நடித்த நடிகர் - நடிகைகள் அனைவரின் இந்த படங்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்றது. இந்த படங்களை தொடர்ந்து, இயக்குனர் சாந்தகுமார், தற்போது புதிய கிரைம் ரொமான்டிக் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான 'ரசவாதி' - The Alchemist’டை அறிவித்துள்ளார். இதில் அர்ஜுன் தாஸ் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இதுவரை நடித்திராத மிரட்டலான கெட்டப்பில் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் ரக்ஷிதா! வைரலாகும் வீடியோ!

ரம்யா சுப்ரமணியன், ஜி.எம். சுந்தர், சுஜித் ஷங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா, ரிஷிகாந்த் மற்றும் பல நடிகர்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். ’மௌனகுரு’ மற்றும் ’மகாமுனி’ படங்களுக்கு பிறகு சாந்தகுமாருடன் மூன்றாவது முறையாக ‘ரசவாதி’ படம் மூலம் எஸ்.எஸ். தமன் இணைந்து இசையமைக்கிறார்.

கயல் சீரியலில் எழில் திருமணம் யாருடன் நடந்தது தெரியுமா? செம்ம ட்விஸ்ட்... வைரலாகும் புகைப்படம்..!

சரவணன் இளவரசு மற்றும் சிவகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்கள். வி.ஜே. சாபு ஜோசப் எடிட்டிங் பணிகளை  கவனிக்க, சதீஷ் கிருஷ்ணன் நடன இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.  இயக்குநர் சாந்தகுமாரின் முந்தைய இரண்டு படங்களுமே தனித்துவமான திரைக்கதையைக் கொண்டிருந்தது. அதுபோல, ‘ரசவாதி’ திரைப்படமும் நிச்சயம் ஒரு புதிய சினிமா அனுபவத்தை பார்வையாளர்களுக்குக் கொடுக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இப்படம் கொடைக்கானல், மதுரை, கடலூர் மற்றும் பழனி போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. ’ரசவாதி’ படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக முடியும் தருவாயில் உள்ளது. இப்படத்தின் ஆடியோ, டிரைலர் மற்றும் உலகம் முழுவதும் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!