சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன பருந்து, காக்கா கதைக்கு அர்த்தம் இதுதானா?.. பற்ற வைத்த புளூ சட்டை மாறன்!

By Ansgar R  |  First Published Aug 5, 2023, 4:34 PM IST

அது என்னவோ தெரியவில்லை, முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தை மிகக்கடுமையாக விமர்சித்து வருகின்றார் பிரபல திரைப்பட விமர்சகர் மற்றும் இயக்குனர் இளமாறன் என்ற ப்ளூ சட்டை மாறன். 


தினமும் ப்ளூ சட்டை மாறன் போடும் ட்விட்டர் பதிவுகளில், ஒன்று அல்லது இரண்டு பதிவிலாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தை ஆக்ரோஷமாக விமர்சித்து வருகின்றார் மாறன். அதிலும், ஜெயிலர் பட இசைவெளியீட்டு விழாவில் ரஜினி சில கருத்துக்களை கூறிய பிறகு கடும்கோபத்தில் பதிவுகளை போடுகிறார் அவர். 

ஜெயிலர் பட இசை வெளியிட்டு விழாவில், ரஜினி காகம் என்று கூறியதே தன்னைத்தான் என்றும் ஏற்கனவே ஒரு பதிவை போட்ட நிலையில், "பழம்பெரும் பருந்து பதட்டப்பட்ட கதை" என்று தலைப்பில் பக்கம் பக்கமாக ட்விட்டர் பகுதியில் பொரிந்து தள்ளியுள்ளார் மாறன்.. அந்த கதை பின்வருமாறு..

Tap to resize

Latest Videos

"ஒரு ஊரில் ஒரு பழம்பெரும் பருந்து இருந்ததாம். அதனிடம் 'மிருகம்' இயக்குனர் Paddy Suriyan.. ஒரு கதை சொன்னாராம். இவரது  'மருத்துவர்' ஹிட்டானதால்.. உடனே ஓகே சொன்னதாம் முந்தைய வேட்டைகளில் தோல்வியடைந்த பருந்து".

"உங்கள் இளமைக்கால பருந்து கேரக்டரில் எனது நண்பர் CSK நடித்தால் நன்றாக இருக்கும். அவர் உங்கள் தீவிர ரசிகரும் கூட'  என கூறினாராம் Paddy Suriyan. 'வேணாம். படம் ஹிட்டானால் அவரால்தான் ஓடியது என்று அனைவரும் சொல்வார்கள்' என்று நோ சொல்லிவிட்டதாம் பருந்து".

அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘ரசவாதி'- The Alchemist’..! முக்கிய அப்டேட் வெளியானது..!

"முந்தைய படங்களை போல தமிழில் மட்டும் எடுத்தால் சக ஸ்டார்களின் கலக்சனை தொட இயலாது என்பதால் பான் இந்தியா படமாக மாற்ற முடிவு செய்தனராம். ஆனால் ஃபார்மில் இருக்கும் சஞ்சய் தத், விஜய் சேதுபதி, ஃபஹத் பாஸில் உள்ளிட்ட எவரும் வேண்டாம் என்றதாம் பருந்து. காரணம்:  படம் ஹிட்டானால் அவரால்தான் ஓடியது என்று அனைவரும் சொல்வார்கள். பிறகு என் கெத்து என்னாவது?"

"ஆகவே சக பழம் பருந்துகளான ஜாக்கி, சிவராஜ் ஆகியோரை ஆட்டத்தில் சேர்த்துள்ளதாம். இதற்கு முன்பு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரியளவில் பரிச்சயம் ஆகாத நானா படேகர், சுனில் ஷெட்டி ஆகியோரை வில்லனாக சேர்த்தது ஊரறிந்ததே".

'நடிகைகளில் தற்போது ட்ரெண்டில் உள்ள ராஷ்மிகா, சமந்தாவை தேர்வு செய்யலாமா?' என்றதற்கு 'வேண்டாம். நீலாம்பரியும், சுறா நாயகியுமே போதும்' என்றதாம் பருந்து. காரணம்: அதேதான். ஆனால் எதிர்பாராத திருப்பமாக சுறா நாயகி ஆடிய பாடல் சூப்பர் ஹிட்டாகி, இவர் பஞ்ச் வைத்து பாடியதாக வரும் இரு பாடல்களும் கண்டுகொள்ளப்படாமல் போனதால் கடும் கடுப்பானதாம் பருந்து".

"ஆகவே ட்ரைலரில் ஒரு இடத்தில் கூட சுறா நாயகியின் முகம் தெரியக்கூடாது என்று கட்டளை போட்டு விட்டதாம் பருந்து. காரணம்: அதேதான்". ஒரு காலத்தில் வில்லன், நாயகி, துணை நடிகர்கள் என அனைவரும் ஸ்கோர் செய்ய வாய்ப்பு அளித்ததால் மட்டுமே பருந்தின் படங்கள் வெற்றியடைந்தன. அப்போது பகிர்ந்து வாழும் காக்கை குணம் பருந்திற்கு இருந்தது". "ஆனால் இன்று  'இங்க எல்லாமே நான்தான். நான் மட்டும்தான்' என தனியே வானில் சுற்றித்திரிய முடிவெடுத்துள்ளது அப்பருந்து".

என்று அந்த முழுநீள விளக்கத்தை கொடுத்துள்ளார் மாறன், வழக்கம் போல அவர் பதிவை போட்டதுமே, ரஜினி ரசிகர்கள் கமெண்ட்டில் திட்ட அதற்கு சலிக்காமல் பதிலும் கூறி வருகின்றார் ப்ளூ சட்டை மாறன். 

ஜீவானந்தம் யார் தெரியுமா? உடைந்தது சஸ்பென்ஸ்... இதை தாங்குவாரா குணசேகரன்! 'எதிர்நீச்சல்' அப்டேட்!

click me!