பூக்கோலமிட்டு ஓணம் கொண்டாடிய மாளவிகா !தாவணி பாவாடையில்..பார்ப்போர் மனதை பற்றிக்கொள்ளும் விஜய் பட நாயகி

Published : Sep 08, 2022, 08:37 PM ISTUpdated : Sep 08, 2022, 08:41 PM IST
பூக்கோலமிட்டு ஓணம் கொண்டாடிய மாளவிகா !தாவணி பாவாடையில்..பார்ப்போர் மனதை பற்றிக்கொள்ளும் விஜய் பட நாயகி

சுருக்கம்

ஓணம் பண்டிகையை அத்தப்பூ கோலமிட்டு இவர் கொண்டாடி உள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்களை பெற்று வருகிறது

பிரபல ஒளிப்பதிவாளரான மோகனன் அவர்களின் மகளான மாளவிகா முன்னணி நாயகியாக திகழ்ந்து வருகிறார். முன்னதாக மலையாளம், கன்னடம், பாலிவுட் படங்களில் அடுத்தடுத்த அறிமுகம் ஆகி இருந்த மாளவிகா மோகன். பேட்ட படத்தில் ரஜினியின் தோழனாக வரும் சசிகுமாரின் மனைவி பூங்கொடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். இதை அடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் நாயகியாக அறிமுகமாகி இருந்தார் மாளவிகா மோகனன்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் கல்லூரி ஆசிரியராக தோன்றி கதையின் முக்கிய திருப்புமுனைக்கு காரணமாக இருந்த இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாகிவிட்டார்.  பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் படத்தில் தாராவாக நடித்திருந்தார். இந்த படம் ஓடிடியில் வெளியானதோடு கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்று இருந்தது. 

மேலும் செய்திகளுக்கு...மேடையில் ஜொலிக்கும் சோழர்கள்..பொன்னியின் செல்வன் விழா நாயகர்களின் புகைப்படங்கள் இதோ

தற்போது பாலிவுட்டில் யாத்ரா படத்தில் மும்முறமாக நடித்து வருகிறார் மாளவிகா மோகனன். இரண்டு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியான போதிலும் இவருக்கு தமிழில் போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது. இதற்கிடையே அவ்வப்போது தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வரும் மாளவிகா மோகனன். குட்டை உடை சேலை என அனைத்து உடைகளிலும் கொடுக்கும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு...மகளுடன் விடுமுறையை கழிக்கும் ஸ்ரேயா சரண்..குயூட் போட்டோஸ் இதோ

இவருக்கு 3.5 மில்லியன் பாலோவர்ஸ் இருப்பதால் மாளவிகா மோகன் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்துமே ட்ரெண்டாகி விடுவது வழக்கமாகி வருகிறது. அந்த வகைகள் தற்போது மெல்லிய சேலைகள் இவர் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறது. அதோடு ஓணம் பண்டிகையை அத்தப்பூ கோலமிட்டு இவர் கொண்டாடி உள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்களை பெற்று வருகிறது. அழகான தாவணி பாவாடை அணிந்த இவர் கொடுத்துள்ள புகைப்படங்களை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு...இரு மொழி சூப்பர் ஸ்டார்களுடன் நயன்தாரா.. வெளியானது காட் ஃபாதர் ரிலீஸ் டேட்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பிரஜனுக்கு சம்பளத்தை கிள்ளி கொடுக்காமல் அள்ளிக் கொடுத்த பிக் பாஸ்... அடேங்கப்பா இத்தனை லட்சமா?
ஓவர் பில்டப்போடு வந்து புஸ்ஸுனு முடிந்த புதுச்சேரி மாநாடு..! விஜய் பேசியது என்ன? தளபதியின் முழு ஸ்பீச் இதோ